மாநாடு பாடல் ரிலீஸ் எப்போது… நிலைமை சரியாகட்டும் அதுவரை காத்திருங்கள்… தயாரிப்பாளர் ட்வீட்!
சென்னை: மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி , முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வித்தியாசமான தோற்றத்தில்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரன் நடித்து வருகிறார். இப்படத்தின் வித்தியாசமான தோற்றத்தில் சிலம்பரசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தள்ளிப்போனது
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்தன. படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து ரம்ஜான் பண்டிகையின் போது மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் பாடல் வெளியீடு தள்ளிப்போனது.

தினமும் இழப்பு செய்தி
இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் முதல் பாடல் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் பாடல் வெளியீடு குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பேரிடர் காலத்தில் தினமும் எதாவது இழப்பு செய்தி காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.
Recommended Video

காத்திருங்கள்
மருத்துவமனை வாசலிலும் , கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும் லாக்டவுன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











