ஒரு வழியா ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க... சிம்பு ரசிகாஸ் இனி உங்களுக்கு திருவிழா தான்!
சிம்பு படத்தின் மாநாடு படம் வரும் 25ம் தேதி தொடங்க இருக்கிறது.
Recommended Video
சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி மலேசியாவில் தொடங்க உள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படம் மாநாடு. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்க வேண்டியது.

ஆனால் பல காரணங்களால் இந்த படம் தொடங்காமலேயே இருந்தது. இதனால் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இதனை படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை செய்துள்ளனர்.
முதற்கட்டமாக பாடல் காட்சி தான் படமாக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சில ஸ்டண்ட் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இந்தியா வந்த பின்னர், அடுத்தக்கட்ட பிடபிடிப்பை, சென்னைக்கு அருகில் செட்டு போட்டு படமாக்க உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











