கைவிடப்படும் மாநாடு?: சிம்பு வெயிட்டை குறைத்தது எல்லாம் வீணா?

By Siva

Recommended Video

Maanadu Movie Update: மாநாடு படம் கைவிடப்படுகிறது! வெளிவந்துள்ள உண்மை- வீடியோ

சென்னை: மாநாடு படம் கைவிடப்படுகிறது என்பது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியல் த்ரில்லரான இந்த படத்திற்காக சிம்பு லண்டனுக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார்.

லண்டனில் இருந்து திரும்பி வந்த அவரை பார்த்து வியக்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு பழைய சிம்புவாக மாறிவிட்டார்.

சிம்பு

சிம்பு

மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி படப்பிடிப்பு துவங்கிவில்லை. இதையடுத்து படம் கைவிடப்படுகிறது என்று பேச்சு எழுந்தது. படம் கைவிடப்படவில்லை ப்ரீ ப்ரொடக்ஷன் வேலை நடக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்தார்.

மே மாதம்

மே மாதம்

சிம்பு தனது தம்பி குறளரசனின் திருமண வேலைகளில் பிசியாக இருப்பதால் அது முடிந்த பிறகு படப்படிப்பு துவங்கும் என்றார்கள். ஆனால் குறளரசனின் திருமணம் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தள்ளிப் போட்டுள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஷியல் ஆர்ட்ஸ்

மார்ஷியல் ஆர்ட்ஸ்

மாநாடு படத்திற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்று வருகிறாராம். வம்பு தும்பு எதுவும் செய்யாமல் வெங்கட் பிரபு சொல்வதை எல்லாம் சமத்தாக கேட்டுக் கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X