தெலுங்கில் ரீமேக்காகும் “மாநாடு“… ஹீரோ யாருனு தெரியுமா ?
சென்னை : சிம்புவின் மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எஸ்.ஜே.சூர்யா, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாநாடு.
இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வித்தியாசமான தோற்றத்தில்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரன் நடித்துள்ளார். இப்படத்தின் வித்தியாசமான தோற்றத்தில் சிலம்பரசனின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

டைம் லூப் படம்
தமிழ் சினிமாவிலேயே இதுவரை வராத டைம் லூப் கான்செப்ட்டில் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் உருவாகி உள்ளது. ஹாலிவுட் படமான டெனெட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய நடிகர்கள்
சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் எஸ். ஜே. சூர்யா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாநாடு படம்
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் அண்ணாத்த, எனிமி திரைப்படங்கள் வெளியாவதால் மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கில் ரீமேக்
இந்நிலையில், மாநாடு திரைப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் அல்லு அர்ஜுன். இதுதவிர மாநாடு படத்தை இன்று ஆந்திராவில் அல்லு அர்ஜுன் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிச்சயம் ரீமேக் செய்வார் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











