கோலிவுட்டின் அடுத்த ஜோடி இவங்கதான்..பிறந்த நாள் அதுவுமா லவ் ப்ரோபோசல்!

சென்னை : நடிகை ரெஜினா கசாண்ட்ராவிற்கு பிரபல நடிகர் ஒருவர் லவ் ப்ரோபோசல் செய்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

நடிகை ரெஜினா, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ரெஜினா கசாண்ட்ரா. இதையடுத்து, பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.

ஏராளமான படங்கள் கைவசம்

ஏராளமான படங்கள் கைவசம்

தற்போது தமிழ், தெலுங்கு,கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் 1945 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓரளவிற்கு பெயர் எடுத்தது. தற்போது கருங்காப்பியம், சூர்ப்பனகை, பிளாஷ் பேக், பார்டர் என தமிழில் மட்டும் 4 படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஹாப்பி பர்த்டே பாப்பா.. ஐ லவ் யூ

ஹாப்பி பர்த்டே பாப்பா.. ஐ லவ் யூ

இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ரா தனது 32வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், மாநகரம் திரைப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து நடித்த, சுதீப் கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஹாப்பி பர்த்டே பாப்பா.. ஐ லவ் யூ..,உனக்கு எப்போதும் நல்லதே நடக்கும்.. இதே மாதிரி ஹாப்பியா இரு என்று பதிவிட்டுள்ளார்.

காதலிக்கிறார்களா?

காதலிக்கிறார்களா?

இதை பார்த்த ரசிகர்கள் கௌதம் கார்த்திக்கிற்கும் மஞ்சிமாவுக்கும் இப்போதுதான் திருமணம் ஆச்சு அதுக்குள்ள கோலிவுட்டின் அடுத்த ஜோடியா என கேட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ இல்லையோ, எதையாவது கொளுத்திப்போடுவோம் என இவர்களின் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X