மாநகரம் ஸ்ரீயின் கொடுமையான நிலைமை.. ஏமாற்றியது நடிகர் சூர்யாவின் உறவினரா?.. அவரே சொல்லிருக்காரு

சென்னை: சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் முதலில் வழக்கு எண் 18/9, மாநகரம், வில் அம்பு, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

கனா காணும் காலங்கள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்தவர் ஸ்ரீ. அவரது உண்மையான பெயர் ஸ்ரீராம் நடராஜன். அந்த சீரியலுக்கு பிறகு அவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஹிட் மட்டுமின்றி ஹீரோ யாரு ப்பா இவ்வளவு இயல்பா நடிச்சிருக்காரே; அவருக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் கோடம்பாக்கத்தில் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். அதற்கேற்றபடி ஸ்ரீயும் கதைகளை நிதானமாகவும், தெளிவாகவும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

ஹிட்கள் கொடுத்த ஸ்ரீ: அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் அடி பொலி ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு வில் அம்பு, இறுகப்பற்று, சோன்பப்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். அவற்றில் வில் அம்பு சுமாராகவும், இறுகப்பற்று சூப்பராகவும் வரவேற்பை பெற்றன. வளர்ந்துவரும் தலைமுறை நடிகர்களில் கண்டிப்பாக ஸ்ரீக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவே பெரும்பாலானோரால் கருதப்பட்டது.

Maanagaram Sri explains his condition for the first time Here are Details

எழுத்தாளரும்கூட: ஸ்ரீ நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு எழுத்தாளரும்கூட. ஏற்கனவே ஹைக்கூ என்கிற பெயரில் நாவல் எழுதியிருக்கிறார். அடுத்ததாக டயானா என்கிற பெயரில் ஒரு நாவல் எழுதி அமேசான் தளத்தில் விற்பனைக்கும் வைத்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் அவர் ஜொலித்தது திரைத்துறையில் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகிவிட்டது. ஸ்ரீயும் இரண்டு குதிரைகளில் லாவகமாக சவாரி செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி தந்த வீடியோக்கள்: கடந்த சில வருடங்களாக நடிகர் ஸ்ரீயை பலரும் மறந்துவிட்டார்கள். அவருக்கும் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீ தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண கிடைத்தன. அதில் அவர் எலும்பும் தோலுமாக இருந்து; நிர்வாண வீடியோ ஒன்றை எடுத்து ஆபாச சைகைகளையும் செய்தார். அதனைப் பார்த்த அனைவருமே ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.

உறவினரின் விளக்கம்: ஸ்ரீயின் உறவினர் ஒருவர்,'நடிகர் ஸ்ரீ ரொம்பவே டிப்ரெஷனில் இருக்கிறார். அவர் நடித்த படங்களுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. குடும்பத்திலிருந்தும் அவர் ஒதுங்கிவிட்டார். தனிமையில் இருக்கிறார். குடும்பத்தினர் அவரை அழைத்தும் மீண்டும் வருவதற்கு மறுக்கிறார்' என தெரிவித்திருந்தார். அதேபோல் இன்னோருவரோ, 'மன நல மருத்துவரிடம் ஸ்ரீ சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது குடும்பம் நல்ல நிலைமையில் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீயின் போஸ்ட்?: இந்நிலையில் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டதாக புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அதில், "இறுகப்பற்று, வில் அம்பு ஆகிய படங்களுக்காக Potential Pictures,நல்லுசாமி பிக்சர்ஸ், ஸ்டார் ஃபிலிம் லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்பளத்தை கொடுக்கவில்லை. நீண்ட நாட்களாக எனக்கு வராத சம்பளம் வந்துவிடும் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறேன்" என அவர் கூறியிருந்தது போல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பெரும் ஷாக்காகியிருக்கிறார்கள். மேலும் வில் அம்பு படத்தை தயாரித்தவர் இயக்குநர் சுசீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மாநகரம், இறுகப்பற்று படங்களை எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டோர் தயாரித்திருந்தார்கள். Potential ஸ்டூடியோஸில் பிரபுவும் ஒரு பார்ட்னர் ஆவார். மேலும் அவர் நடிகர் சூர்யாவின் உறவினர் என்றும் அறியப்படுகிறார். ஆக சுசீந்திரன், எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டோர்கள்தான் ஸ்ரீயை ஏமாற்றியவர்களா என்று கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்திருக்கின்றன. இதற்கிடையே ஸ்ரீயின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படம் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X