மாநகரம் ஸ்ரீக்கும் குடும்பத்துக்கும் தொடர்பில்லை.. நிறைய ஏமாத்திட்டாங்க.. உறவினர் கொடுத்த விளக்கம்

சென்னை: தமிழ் சினிமாவில் நேற்றிலிருந்து ஹாட் டாபிக்காக இருப்பவர் மாநகரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீதான். நல்ல நடிகர் என்று தான் நடித்த படங்களின் மூலம் தொடர்ந்து பெயர் எடுத்துவந்தவர் கடந்த சில வருடங்களாகவே ஆளை காணவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்கள் வெளியாகின. அதில் ஸ்ரீயின் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ரீயா இவர் என்று உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் விளக்கமளித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் வெகு பிரபலம். அதில் நடித்த இர்ஃபான், பாண்டி உள்ளிட்டோர் நல்ல அடையாளத்தை பெற்றார்கள். அவர்களில் இர்ஃபான் காணாமல் போய்விட்டார்; பிளாக் பாண்டி அவ்வப்போது நடித்துவருகிறார். அந்த சீரியலில் நடித்தவர்களில் பெரிய வெளிச்சத்தை பெற்றவர் என்றால் அவர் ஸ்ரீதான். பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்த வழக்கு எண் 18/9 படத்தில்தான் அவர் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமானார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

மாநகரம் ஹீரோ: அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஸ்ரீ நன்றாக நடித்திருந்தாலும் மிஷ்கினின் நடிப்பு ஸ்கோர் செய்துவிட்டது. இருப்பினும் ஸ்ரீக்கு கண்டிப்பாக பெரிய எதிர்காலம் தமிழ் சினிமாவில் உண்டு என்று அவரது நடிப்பை பார்த்த பலரும் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்தார்கள். தொடர்ந்து வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

Maanagaram Sri Relative Explains About Sri s Current Situation

காணாமல் போன ஸ்ரீ: இதுவரை அவர் நடித்த ஆறு படங்களில் ஐந்து படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ஹிட் ஆனதோடு மட்டுமின்றி அவருக்கென்று நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது. எனவே பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த சூழலில்; திடீரென சினிமாவிலிருந்து ஆளே காணாமல் போனார் ஸ்ரீ. சொல்லப்போனால் பலரும் அவரை சுத்தமாக மறந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின.

ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி: அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்கள். அதாவது தலை முடியை அளவுக்கு அதிகமாக வளர்த்துக்கொண்டு; உடல் எடை மெலிந்து; தன்னிலை மறந்தபடி அவர் இருந்தார். நல்ல நடிகராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஸ்ரீக்கு இப்படியொரு நிலைமையா?; அவரது இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று பலரும் சோகத்துடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

உறவினரின் விளக்கம்: அவரது உறவினர் இதுகுறித்து கூறுகையில், "ஸ்ரீ என்னுடைய உறவுக்கார அண்ணன்தான். அவர் நடித்த படங்களுக்கான பணம் அவருக்கு வந்து சேரவில்லை. இதன் காரணமாக அவர் ரொம்பவே மன அழுத்தத்துக்கு சென்றுவிட்டார். அப்போது குடும்பத்திலும் ஒரு பிரச்னை ஏற்அட்டது. இதன் காரணமாக அவர் தனியாக சென்றுவிட்டார். இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. குடும்பத்தினர் கூப்பிட்டு பார்த்தும் வர முடியாது என்றே சொல்கிறார். அந்த இன்ஸ்டாகிராம் ஐடி அவருடையதுதானா என்று பலரும் கேட்கிறார்கள். அது அவருடைய உண்மையான ஐடிதான். நிறைய நடித்தும் பணம் கிடைக்கவில்லை. பலர் அவரை ஏமாற்றிவிட்டார்கள். இதனால் விரக்தியடைந்த அவர் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X