தொடங்கியது மானே தேனே பேயே!
ரசிகனை சட்டென்று நிறுத்தி யோசிக்க வைக்கும் அளவுக்கு தலைப்புகள் அமைய வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கிறார்கள் இன்றைய இயக்குநர்கள்.
அதன் விளைவு... சமீபத்தில் தொடங்கியுள்ள ஒரு படத்துக்கு மானே தேனே பேயே என்று தலைப்பிட்டுள்ளனர்.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணாவின் மூன்றாவது படம் இது.
கல்சன் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா நடிக்கும் பென்சில் படத்தைத் தயாரிப்பதும் இந்த நிறுவனம்தான்.
ஆரி நாயகனாக நடிக்கும் மானே தேனே பேயே படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வங்காள நடிகை சுபஸ்ரீ கங்குலி. எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.
Comments


Click it and Unblock the Notifications