மாங்கல்ய தோஷம்.. நயன்தாரா கோவில் கோவிலாக போக இதுதான் காரணம்?
சென்னை : நடிகை நயன்தாராவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் தான் கோவில் கோவிலாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒன்றாக வசித்து வந்தனர். வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலும் ஒன்றாக சுற்றி வந்தனர்.
இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருப்பதியில் சாமி தரிசனம்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஐபிக்கள் கலந்து கொள்வதில் பிரச்சனை இருந்ததால் திருமணம் மகாபலிபுரத்தில் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதையடுத்து, திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

கேரளாவில்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நயன்தாராவின் தாயார் அவரது திருமணத்திற்கு வராததால், அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க கணவருடன் பிறந்த வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

குல தெய்வ கோயிலில்
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நயன்தாரா கடந்த 2011 ஆம் ஆண்டு இந்து மதத்திற்கு மாறினார். அப்போது முதலே கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார் நயன்தாரா. திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலான ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதியில் சாமி தரிசனம் செய்தனர்.

மாங்கல்ய தோஷம்
இந்நிலையில், நடிகை நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் இதனால் தான் அவர் கோவில் கோவிலாக சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு முன்பே சில பரிகாரங்களை நயன்தாரா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில பரிகாரங்கள் செய்ய வேண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

மீண்டும் தாலி கட்டுவார்
மேலும் மாங்கல்யத்தில் தோஷம் இருப்பதால், மீண்டும் ஒரு முறை விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனால், விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் மீண்டும் தாலி கட்டுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











