நாளை வெளியாகுது மாறா ட்ரைலர்…சூப்பரான அப்டேட் வெளியிட்ட படக்குழு !
சென்னை: மாதவன், சாரதா ஸ்ரீ நாத் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மாறா.
இந்த படத்தை இயக்குனர் திலிப் குமார் இயக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
மாறா படத்தின் ட்ரைலர் நாளை Amazon Prime ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு
மலையாளம் மொழியில் வெளியான சார்லி படத்தின் ரீமேக் தான் மாறா. மலையாளம் மொழியில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு, தமிழில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்த உடன் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

விரைவில் மாறா
மாதவன் நடிப்பில் சமீபத்தில் நிசப்தம் படம் வெளியாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கலவையான விமர்சனங்களையே பெற்றது நிசப்தம். இதையடுத்து வெளிவர உள்ள மாறா திரைப்படத்தை மேடி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

வெற்றி தொடருமா
ஜெர்சி, நேர்கொண்ட பார்வை போன்ற சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்துள்ளார் சாரதா. இதையடுத்து மாறா படத்தில் மாதவனுடன் இரண்டாம் முறை இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களின் வெற்றி தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
மாறா திரைப்படம் டிசம்பர் 17 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளி போடப்பட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து ஒரு வழியாக நாளை ட்ரைலர் வெளியிட போவதாக வெளிவந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











