ஹாட்ரிக்.. ஒரே அடியாக ஒடிடி நாயகனாக மாறிய தனுஷ்.. பொங்கலுக்கு வெளியாகும் மாறன் மோஷன் போஸ்டர்!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு தனுஷின் மாறன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது.
ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே படங்களை தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படமும் ஒடிடியில் வெளியாகப் போவது உறுதியாகி உள்ளது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக போகிறது.

ஹாட்ரிக் ஒடிடி
சத்யஜோதி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படம் விரைவில் ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தொடர்ந்து நடிகர் தனுஷின் மூன்றாவது புதிய திரைப்படம் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸில் ஜகமே தந்திரம்
கர்ணன் திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான நிலையில், உடனடியாக லாக்டவுன் போடப்பட்டது. அதன் பின்னர் அமேசான் பிரைமில் அந்த படம் வெளியானது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது.

கலாட்டா கல்யாணம்
சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படம் ஒடிடியில் வெளியாகப் போவது உறுதியாகி உள்ளது.

ஒடிடியில் மாறன்
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள மாறன் திரைப்படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ஒடிடி ரிலீசுக்கு படம் தயாராகி விட்டது.

மோஷன் போஸ்டர்
தனுஷ் ரசிகர்களுக்கு இந்த பொங்கலுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக மாறன் திரைப்பட மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் ஒடிடி ரிலீசா என தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் ஒடிடி ரிலீஸ் நல்ல விஷயம் தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில்
கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் பூமி திரைப்பட புரமோஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் நடைபெறுமா? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











