Don't Miss!
- News
லெட்ஸ் கோ ஆன் தி "புல்லட்டு".. எதற்கும் துணிந்த எடப்பாடி.. ஒரே நாளில் 2 சிக்ஸர்.. அப்போ ஓபிஎஸ்?
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுத்த தனுஷ்… சாதனை படைத்த ‘பொல்லாத உலகம்’ பாடல்!
சென்னை : நடிகர் தனுஷின் மாறன் திரைப்பட பாடல் 7.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மாறன்“ பொல்லாத உலகம் பாடல்.. வேறலெவல் எனர்ஜி.. தனுஷின் நடனத்தால் மெர்சலான ரசிகர்கள் !

மாறன்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறன். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் போல
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொல்லாத உலகம்' என்ற பாடலை படக்குழு சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியிட்டது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் தனுஷ் மைக்கேல் ஜாக்சன் போல, உடலை வளைத்து நெளித்து மிகவும் மாஸ் காட்டி ஆடி இருந்தார். வழக்கமாக தனுஷ் நடனத்தில் மிரட்டுவார் ஆனால், பொல்லாத உலகம் பாடலில் பின்னி பெடலேடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் இந்த பாடலை ஷேர் செய்து வருகின்றனர்

பல பார்வையாளர்கள்
இந்நிலையில் இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 7.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளியாக கோலிவுட் படங்களின் வீடியோ பாடல்களில் இதுவே 24 மணி நேரத்தில அதிக பார்வைகளை பெற்ற பாடலாக கருதப்படுகிறது. இப்பாடல்1 லட்சத்து23 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

செம பிஸி
தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.