டாப்பில் தலைவன் தலைவி வசூல்.. முதல் வார முடிவில் மாரீசன் கலெக்‌ஷன் இவ்ளோ கம்மியா?.. பாவம் வடிவேலு!

சென்னை: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தலைவன் தலைவி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் பட்டையை கிளப்ப ஒட்டுமொத்த ரசிகர்களும் சனி, ஞாயிறுகளில் தியேட்டர்களில் குவிந்தனர்.

ஆனால், அதே சமயம் மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலு, பகத் ஃபாசில் கூட்டணியில் உருவான மாரீசன் படத்திற்கு பெரிதாக வசூல் வரவே இல்லை. மாரி செல்வராஜ் இயக்கியிருந்தால் படம் இந்நேரம் வசூல் வேட்டை நடத்தியிருக்கும் என்றும் எல்லாமே டைரக்டர்கள் கைகளில் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Maareesan 3 days box office defeated by Thalaivan Thalaivi in a huge scale shocks Vadivelu

முதல் 3 நாட்களில் மாரீசன் திரைப்படம் எந்தளவுக்கு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

20 கோடியை கடந்த தலைவன் தலைவி: ஜூலை மாதம் 4ம் தேதி வெளியான 3 பிஹெச்கே படமே அதிகபட்சமாக 13.63 கோடி வசூலை தான் இத்தனை நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் முதல் 3 நாட்களில் 20 கோடி வசூலை கடந்து இந்த மாதத்தின் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கிறது. 2வது வாரத்துக்குள் 50 கோடி வசூலை இந்த படம் கடக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய் சேதுபதியின் ஏஸ் மற்றும் நித்யா மேனனின் காதலிக்க நேரமில்லை தோல்விப் படங்களுக்குப் பிறகு இருவருக்கும் கம்பேக்காக இந்த படம் அமைந்துள்ளது.

மாரீசன் 3 நாள் வசூல்: டிவி தொடர்களை இயக்கி வந்த இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மாரீசன் திரைப்படம் முதல் நாளில் 75 லட்சம் மட்டுமே வசூல் செய்த நிலையில், 2வது நாளில் 1.37 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 1.21 கோடி ரூபாய் என இதுவரை 3.33 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் இதை விட பல மடங்கு அதிக வசூலை தலைவன் தலைவி ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

Maareesan 3 days box office defeated by Thalaivan Thalaivi in a huge scale shocks Vadivelu
Photo Credit:

மாரீசன் தயாரிப்பாளருக்கு நஷ்டமா?: ஆனால், மாரீசன் படத்தின் தயாரிப்பாளரான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரிக்கு இந்த படம் நஷ்டம் இல்லை என்றும் படம் வெளியாவதற்கு முன்பாகவே நான் தியேட்டரிக்கல் லாபம் வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பகத் ஃபாசில் மற்றும் வடிவேலு படம் என்பதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரிய தொகைக்கு இந்த படத்தை வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். பகத் ஃபாசில் நடித்துள்ள நிலையில், இந்தியளவில் இந்த படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும் ஓடிடியில் அனைத்து ரசிகர்களையும் 2ம் பாதியில் படத்தில் இருக்கும் ட்விஸ்ட்டுகள் நிச்சயம் கவரும் என கூறப்படுகிறது.

வடிவேலு அப்செட்: திரையரங்க வசூல் ரீதியாக படம் பெரிய லாபத்தை ஈட்டவில்லை என்பது வடிவேலுவை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது என்றும் அடுத்து அவர் காமெடியாக நடிப்பதா? அல்லது கன்டென்ட் ஓரியன்ட்டாக நடிப்பதா என்கிற குழப்பத்தில் உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X