மக்கள் கலைஞன் வைகைப் புயல்.. போஸ்டர் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாரீசன் படக்குழு!

சென்னை: நடிகர் வடிவேலு. இவரை தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு அடையாளத்தில் நிறுத்திவிட முடியாது. நகைச்சுவை நடிகர் என்றாலும் அதிலும் வடிவேலு சிக்ஸர் அடிப்பார். குணச்சித்திர நடிகர் என்றாலும் அதிலும் சிக்ஸர் அடிப்பார். பாடகர் என்றாலும் அதிலும் சிக்ஸர் அடிப்பார். சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் ஒதுங்கி இருந்தபோதும் கூட, ஒட்டுமொத்த இணையவாசிகள் கூட்டமும் இவரைச் சுற்றித்தான் இருந்தனர்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவருக்கு இன்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்த நாள். பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்த நிலையில், தற்போது அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகிவரும் மாரீசன் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

vadivelu vadivelu birthday maareesan

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, அதன் பின்னர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். இவரது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்க, லைகா நிறுவனம் மிகவும் முக்கிய காரணமாக இருந்தது என்ற பேச்சு இப்போதுவரைக்கும் தமிழ் சினிமா வட்டாரத்தில் உள்ளது.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாமன்னன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். குறிப்பாக மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன் எனப்படும் ஃபகத் ஃபாசிலுடன் போட்டி போட்டு நடித்து, அனைவரையும் பிரமிக்க வைத்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். வடிவேலு இந்த படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார்.

vadivelu vadivelu birthday maareesan

மாமன்னன்: படத்தில் வடிவேலு அழும் காட்சியெல்லாம் தமிழ் சினிமாவில் இன்றைக்குள்ள ரசிகர்களால் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தவே முடியாது எனக் கூறும் அளவிற்கு நடித்திருந்தார். அதேபோல், ஃபகத் ஃபாசிலை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது எனலாம். தனது அசாத்திய நடிப்பால், மாமன்னன் படத்தை தமிழ் சினிமாவின் அரியாசணத்தில் அமர வைத்த மக்கள கலைஞன் வடிவேலு.

போஸ்டர்: மாமன்னன் படத்திற்குப் பின்னரும் தொடர்ந்து சீரியஸான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாரீசன். மாமன்னன் படத்திற்கு பிறகு ஃபகத் ஃபாசில், வடிவேலு இணைந்து நடிக்கின்றனர். சுதீஷ் சங்கர் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றது. மாரீசன் படக்குழு சார்பில் வைகைப் புயல் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக போஸ்டரில் வடிவேலு மக்களுடன் இணைந்து நடனம் ஆடிக்கொண்டு உள்ளார். இந்தப் போஸ்டருக்கு பலரும் லைக்குகளை தட்டிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X