மாரீசன் vs தலைவன் தலைவி.. இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வின்னரா யார் வருவார்.. ஒரு சின்ன அலசல்!

சென்னை: வடிவேலு, பகத் ஃபாசில் நடித்துள்ள மாரீசன் திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி உள்ளிட்ட 2 பெரிய படங்கள் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் நாளை முதல் மோதுகின்றன.

இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ள இரண்டு படங்களும் ஸ்டார் வேல்யூ மிக்க படங்கள் என்பதால், முந்தைய வாரங்களை விட இந்த வாரம் தியேட்டர்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maareesan vs Thalaivan Thalaivi Who will crown at Box Office this week
Photo Credit:

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தியேட்டர்களுக்குச் சென்று பார்க்க வேண்டாம் என்றும் 4 வாரங்கள் பொறுமையாக இருந்து ஓடிடியிலே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு மக்கள் பலரும் வந்துவிட்ட நிலையில், தியேட்டரில் பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து விட்டன. இந்நிலையில், இந்த இரு படங்களில் அதிகமாக கல்லா கட்டப் போவது யாரு என்பது குறித்தும், இந்த வாரமாவது தமிழ் சினிமாவுக்கு பிளாக்பஸ்டர் படம் அமையுமா என்பது குறித்து ஒரு லேசான அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..

மாரீசனுக்கு பாசிட்டிவ் விமர்சனம்: ஆர்.பி. செளத்ரி தயாரித்து சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள மாரீசன் படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாகவே போடப்பட்ட நிலையில், அதற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தலைவன் தலைவி படத்துக்கு இன்னமும் பத்திரிகையாளர் காட்சி ஏதும் போடவில்லை. நாளை காலை 9 மணி முதல் படம் வெளியாகும் என தெரிகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலுவின் நடிப்பு மிரட்டலாக உள்ள நிலையில், மாரீசன் படத்தை பார்க்க கணிசமான ரசிகர்கள் கூட்டம் அந்த படத்துக்கு டிக்கெட்டை புக் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

Maareesan vs Thalaivan Thalaivi Who will crown at Box Office this week
Photo Credit:

தலைவன் தலைவி நிலை என்ன?: கிராமத்து குடும்ப கதையாக பாண்டிராஜ் இயக்கியுள்ள தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள நடிப்பை வெளிக்காட்டும் விதமாக வெளியான டிரைலர் ஒன்றே போதும், அந்த படத்தை பார்க்க தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். இதுவரை புக் மை ஷோவில் மாரீசன் படத்துக்கு 5.5 ஆயிரம் லைக்குகளும், தலைவன் தலைவி படத்துக்கு 41.2 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன.

பாக்ஸ் ஆபீஸை வெல்லப்போவது யார்?: மாரீசன் படத்தை விட தலைவன் தலைவி படத்துக்குத்தான் அதிகமான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், டிக்கெட் புக்கிங்கும் அந்த படத்திற்கு அதிகமாகவே உள்ளது. நாளை 2 படங்களும் வெளியான பின்னர், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி படம் டிரைலரில் காட்டியதை போல கம்ப்ளீட் பேக்கேஜாக இருந்தால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அந்த படம் அமைந்து விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், கடைசியாக வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் மற்றும் நித்யா மேனனின் காதலிக்க நேரமில்லை படங்கள் போல சொதப்பி விட்டால், மாரீசன் படத்துக்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கி விடும். இரண்டு படங்களும் சிறப்பாகவே வசூல் அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இருக்கும் நிலவரப்படி தலைவன் தலைவி படம் தான் இந்த வாரம் மாரீசனை விட அதிகம் கல்லா கட்டும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X