Maargan Public Review: ரசிகர்களின் பாராட்டுகளை வாரிக் குவிக்கும் விஜய் ஆண்டனி.. மார்கன் பப்ளிக் விமர்சனம்!

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் மார்கன். படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் இசையும் அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் மூலம் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். அவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகை ஒருவர் கூறுகையில், " கதை, நடிப்பு, திரைக்கதை ரொம்பவே நன்றாக உள்ளது. நிறத்தைக் கொண்டு ஒருவரை ஒடுக்குவது, உருவ கேலி செய்வது தவறு என படத்தில் கூறுகிறார்கள். அதனால் அவர்கள் எவ்வளவு பாதிப்படைகிறார்கள் என்பது குறித்தும் படத்தில் பேசியுள்ளார்கள். படத்தில் தமிழறிவு (அஜய் தீஷன்) கதாபாத்திரத்தில் நடித்தவர் நன்றாக நடித்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.

அதேபோல் ரசிகர் ஒருவர் கூறும்போது, " படம் மிகவும் பரபரப்பாக சென்றது. படத்தில் இவர்தான் வில்லன் என யூகிக்க முடியவில்லை. அதை சஸ்பென்ஸாக கொண்டு சென்றது நன்றாக உள்ளது. படத்தில் தொய்வு என்பதே இல்லை. அடுத்து என்ன என்ன என்பதே மிகவும் சுவாரசியமாக உள்ளது. கருப்பு வெள்ளையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.

கருப்பு - வெள்ளை: மற்றொரு ரசிகை கூறுகையில், " படம் முதலில் பயமாகத்தான் இருந்தது. போகப்போக செட் ஆகிவிட்டது. அதன் பின்னர் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகு என்ற கருத்தை படம் விமர்சித்துள்ளது. பெண்கள் கருப்பாக இருக்க கூடாது என்ற மனநிலை இங்கு உள்ளது. கருப்பாக இருப்பவர்களை குறைத்து மதிப்பிடுவதால் அவர்கள் எவ்வாறு பழிவாங்குவார்கள். அவர்கள் பழி வாங்கினால் என்ன ஆகும் என்பதுதான் படமே. விஜய் ஆண்டனி வித்தியாசமாக நடித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

சென்டிமென்ட் ஒர்க்-அவுட்: நிறம் மட்டுமல்ல, யாரும் யாரையும் தாழ்த்த கூடாது. எல்லாரும் சமம் என யோசிக்க வேண்டும். வில்லனின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சரி எனத் தோன்றும், கதாநாயகனின் பார்வையில் பார்க்கும் போது நடக்க கூடாது எனத் தோன்றும். படத்தில் சென்டிமென்ட் கூட நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. விஜய் ஆண்டனி வரும் காலங்களிலும் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க வேண்டும்" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

Maargan Public Review Vijay Antony Receives Positive Reviews From Fans for Good Screenplay
Photo Credit:

அடக்கி வாசித்த விஜய் ஆண்டனி: மார்கன் ஒரு தரமான படம். விஜய் ஆண்டனி நடித்த படங்களில் இது தரமான படம். படத்தில் பின்னணி இசை நன்றாக உள்ளது. படத்தில் எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது. நிறப் பாகுபாடு குறித்து பேசியுள்ளார்கள். முழுப்படமாக பார்க்கும் போது மனதிற்கு நெருக்கமான படமாக இது அமையும் எனக் கூறியுள்ளார். அஜய் தீஷன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு நடிப்பில் நல்ல எதிர்காலம் உள்ளது. த்ரில்லர் படம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இந்த படம் கட்டாயம் கனெக்ட் ஆகும். படத்தின் கிளைமாக்ஸ் வரை இவர்தான் கொலைக்காரர் என கண்டுபிடிக்கவே முடியாது. மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை. நடனம், சண்டை என எதுவும் இல்லாமல், விஜய் ஆண்டனி அடக்கி வாசித்துள்ளார்" என கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X