தனுஷ் கேஸ் போட்டும் மாரி 2-ஐ லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்: டானையே வச்சு செஞ்சுட்டாங்களே

By Siva

Recommended Video

மாரி 2 ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: நீதிமன்ற தடையையும் மீறி மாரி 2 படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

புதுப்படங்கள் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிடுவதை ஒரு வேலையாகவே வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் தீயாக வேலை செய்து உடனே வெளியிட்டு விடுகிறது.

தமிழ் ராக்கர்ஸின் சேட்டை பற்றி தெரிந்து தான் தனுஷ் தனது மாரி 2 படத்தை வெளியிடும் முன்பு நீதிமன்றத்தை அணுகினார்.

தடை

தடை

மாரி 2 படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 16 ஆயிரத்து 135 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை சட்டவிரோதமாக வெளியிட 16 ஆயிரத்து 135 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் மாரி 2 படம் ரிலீஸான வேகத்தில் அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். முன்னதாக நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரஜினியின் 2.0 படத்தை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல்

வசூல்

மாரி 2 படத்திற்கு நல்ல விமர்சனம் எழுந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அது குறித்து நல்லவிதமாக சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். இந்நிலையில் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது அதன் வசூலை பாதிக்கும்.

படங்கள்

படங்கள்

தியேட்டர்களில் கட்டண கொள்ளை நடத்துகிறார்கள், பாப்கார்ன், குளிர்பானங்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கிறது என்று கூறி தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எப்பத் தான் இந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் அடைப்பீர்கள் மிஸ்டர் விஷால்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X