ரிப்பீட் மோடில் 'ரவுடி பேபி': தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி #Maari2 #rowdybaby
Recommended Video

சென்னை: மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் மாரி 2. இந்த படம் மூலம் முதன் முறையாக சாய் பல்லவி தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
படத்தில் வரும் ரவுடி பேபி லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
தனுஷ்
தனுஷ் எழுதி பாடியுள்ள ரவுடி பேபி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார் என்பதால் நிச்சயம் தெறிக்கவிட்டிருப்பார் என்று நம்பப்படுகிறது. என் கோலி சோடாவே, என் கறிக் குழம்பே, உன் குட்டி பப்பி நான் டேக் மீ என்று அந்த பாடல் துவங்குகிறது.

இசை
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ரவுடி பேபி பாடல் நன்றாக உள்ளது. அந்த பாடலுக்கு தனுஷும், சாய் பல்லவியும் சேர்ந்து செம ஆட்டம் போடுவதை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மாரி 2 படம் அடுத்த மாதம் 21ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி
ரவுடி பேபி தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. யுவனின் இசை வேற லெவல் என்கிறார்கள்.
அருமை
ரவுடி பேபி பாடலை ரிப்பீட் மோடில் போட்டு கேட்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











