தீபாவளிக்கு தனுஷ் கொடுத்த 'மாரி 2' ஸ்பெஷல் ட்ரீட்: கொல மாஸ்
Recommended Video

சென்னை: மாரி 2 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார்.

இது தனுஷ் தரப்பில் இருந்து தீபாவளி பரிசு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறிவித்தபடி மாலை 6 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
போஸ்டரில் செஞ்சிருவேன் என்பது போன்று தில்லாக போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மாரி 2 செகண்ட் லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. மரண மாஸ், வேற லெவல், சான்சே இல்லை என்று ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மாரி 2 படம் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி, மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











