தனுஷுக்காக ‘விஜயா’வாக மாறும் சர்கார் வில்லி!

மாரி 2 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரப் பெயர் விஜயா எனத் தெரியவந்துள்ளது.

Recommended Video

தனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி- வீடியோ

சென்னை: தனுஷின் மாரி 2 படத்தில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பது தெரிய வந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாரி 2'. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Maari 2: Varalakshmi’s character revealed

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், படம் டிசம்பரில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, படத்தில் நடித்த ஒவ்வொருவரின் புகைப்படமாக படக்குழு வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரி 2 படத்தில் சாய்பல்லவியின் அராத்து ஆனந்தி கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தற்போது வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் பற்றிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்மூலம் விஜயா என்ற கதாபாத்திரத்தில், மாநில சட்டம் மற்றும் நீதித்துறையின் இணைச் செயலாளராக வரலட்சுமி நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சர்கார் படத்தில் வரலட்சுமி நடித்த கோமலவள்ளி கதாபாத்திரம் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X