மாரி படத்துக்கு மாறி மாறி பிரபலங்கள் வாழ்த்து!

By Manjula

சென்னை: தனுஷின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் மாரி திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ரம்ஜான் ஸ்பெஷலாக ரஜினிமுருகன் மற்றும் வாலு திரைப்படங்கள் வெளியாகும் என்று வந்த செய்திகள் எதுவும் உண்மையாகாமல் போனதில் சோலோவாக வெளியாகியிருக்கிறது மாரி.

முதன்முறையாக தனுஷுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள மாரி திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.

இன்று வெளியாகி மாரி திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்களுடன் இணைந்து திரை நட்சத்திரங்களும் படக்குழுவை வாழ்த்தி இருக்கின்றனர். வாழ்த்திய நட்சத்திரங்களின் சில ட்விட்டர் பதிவுகளை இங்கு பார்க்கலாம்.

தமன்னா - மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்

தனுஷுடன் வேங்கை மற்றும் படிக்காதவன் படங்களில் இணைந்து நடித்த நடிகை தமன்னா படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று தனுஷ் மற்றும் மாரி படக்குழுவினரை ட்விட்டரில் வாழ்த்தி உள்ளார்.

வாழ்த்துக்கள் – தயா அழகிரி

மாரி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தயாரிப்பாளர் தயா அழகிரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்து- ராதிகா சரத்குமார்

மாரி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது, தரலோக்கல் படம் செம மாஸ்..என்று பாராட்டியிருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

நாளைவரை காத்திருக்க முடியாது – கிரிஷ்

பாடகர் கிரிஷ் "மாரி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் மாரி படத்தை நாளை மதியம் பார்க்கப் போகிறேன், ஆனால் என்னால் காத்திருக்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X