Don't Miss!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தெலுங்கில் 'மாஸ்' காட்டப்போகும் 'மாரி' தனுஷ்
சென்னை: கடந்த ஆண்டு தமிழில் வெளியான மாரி படம் வருகின்ற 18ம் தேதி மாஸ் என்னும் பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் மாரி.
தனுஷ் ரவுடியாக நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. செண்டிமெண்டாக படத்தை ரம்ஜான் தினத்தில் வெளியிட்டார் தனுஷ்.
ஆனால் விஐபி படத்திற்கு கிடைத்த வசூலும், வரவேற்பும் மாரிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து மாஸ் என்ற பெயரில் படக்குழு வெளியிடுகின்றது.
#Maari releasing in Telugu as #Maas on March 18th :) https://t.co/VapLPS3EyK
— Balaji Mohan (@directormbalaji) March 6, 2016
இந்த செய்தியை ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் இப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
விரைவில் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் மாரி படத்தின் 2 வது பாகம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தகது.