ஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி!

By

சென்னை: தனுஷ் நடித்துள்ள மாரி படத்தின் டைட்டில் பாடல், சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தனுஷ், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம், மாரி.

இதில் விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர், காளி வெங்கட், மைம் கோபி உள்பட பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலாஜி மோகன் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் இடம்பெறும், 'தர லோக்கல்' பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார்.

சர்வதேச ரியாலிட்டி

சர்வதேச ரியாலிட்டி

இந்தப் பாடல், பிரிட்டனில் நடந்த சர்வதேச ரியாலிட்டியில் ஷோவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பிரிட்டனில் காட் டேலன்ட் என்ற நடன ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்குபெற்றுள்ளனர். அவர்கள் வீடியோ மூலமாக தங்கள் திறமைகளை நிகழ்ச்சியின் நடுவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

தரலோக்கல் பாடல்

தரலோக்கல் பாடல்

இதில் மும்பையைச் சேர்ந்த X1X என்ற நடனக் குழுவினரும் பங்கேற்றனர். அவர்கள் தனுஷின் தரலோக்கல் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி கலக்கியுள்ளனர். பிரமிடு போல நின்றும் தாவியும் மாடர்னாக நடனமாடி நடுவர்களைக் கவர்ந்துள்ளனர். இந்த நடனத்தைக் கண்டு அந்த நடுவர்கள் வியக்கின்றனர்.

Recommended Video

Bigil Anitha Joins Tovino Thomas 'Forensic'
பாலாஜி மோகன்

பாலாஜி மோகன்

இந்த வீடியோவை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மும்பை இளைஞர்களின் நடனத்தை, கில்லர் பர்ஃபாமென்ஸ் எனப் பாராட்டியுள்ளார். அந்தப் பதிவை அனிருத் மற்றும் தனுஷுக்கும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X