அடுத்தடுத்து அப்டேட்கள்.. ரசிகர்களை பரபரப்பாக்கிய மாமா ரஜினியும், மாப்பிள்ளை தனுஷும்!

மாரி 2 படத்தின் டிரெய்லர் நாளை ரிலீசாக இருக்கிறது.

Recommended Video

நேற்று ரஜினியின் மரணமாஸ்.. நாளை தனுஷின் மாரி 2 மாஸ்!- வீடியோ

சென்னை: மாரி 2 படத்தின் டிரெய்லர் நாளை ரிலீசாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் மாரி. அனிருத்தின் அனல் பறக்கும் பின்னணி இசை கொண்ட இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் ஜேசுதாஸ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த தனுஷே இதிலும் நாயகனாக நடித்துள்ளார்.

அலட்டல் ஆனந்தி:

அலட்டல் ஆனந்தி:

அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ‘அலட்டல்' ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வருகிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா:

யுவன்ஷங்கர் ராஜா:

‘மாரி 2' படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இம்மாதம் 21ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரவுடி பேபி பாடல் போன்றவை கடந்த மாதம் வெளியாகி டிரெண்டிங் ஆனது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளது.

டிரெய்லர் ரிலீஸ்:

டிரெய்லர் ரிலீஸ்:

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அப்டேட்கள்:

அப்டேட்கள்:

கடந்த மாதம் மாரி 2 படத்தின் பர்ஸ்ட் லுக், ரவுடி பேபி பாடல் என தனுஷ் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ரஜினியின் 2.0 பட ரிலீஸ் ஆனது. நேற்று மாலை, பேட்ட மரணமாஸ் பாடல் வெளியிடப்பட்டு வைரலானது. இந்த சூழ்நிலையில் நாளை மாரி 2 டிரெய்லர் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X