Maaveeran Box Office: மாமன்னனை தூக்கி சாப்பிடும்.. மாவீரன் முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா?

சென்னை: சமீபத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் வசூலை மிக எளிதாக மாவீரன் படம் முறியடித்து விடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பலர் நடித்துள்ள மாவீரன் படத்துக்கு விஜய்சேதுபதியும் வாய்ஸ் ஓவர் கொடுத்து பலம் சேர்த்துள்ளார்.

Maaveeran Budget and First Day Box Office Predictions are here

ஜூலை 14ம் தேதி வெளியாகி உள்ள மாவீரன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அதன் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

கோலிவுட்டின் நெக்ஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் கிங்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து கோலிவுட்டின் நெக்ஸ்ட் பாக்ஸ் அபிஸ் கிங்காக மாறி உள்ளார் சிவகார்த்திகேயன்.

முதல் நாளிலேயே 70 சதவீதத்திற்கு மேல் தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி உள்ளன. இதன் காரணமாக நல்ல ஓபனிங் மாவீரன் படத்துக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரன் பட்ஜெட்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு என பலர் நடித்திருக்கும் இந்த படம் ஃபேண்டஸி கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகி உள்ளது.

மேலும், படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு மற்று காமெடியுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளதாகவும் இரண்டாம் பாதியில் சிறிய தொய்வு இருந்தாலும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நிறைவான படத்தை பார்த்த திருப்தியை அளிப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

மாவீரன் முதல் நாள் வசூல் கணிப்பு: பிரின்ஸ் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த நிலையில், சிவகார்த்திகேயன் மாவீரன் படத்துக்கு பெரியளவில் ப்ரமோஷன் செய்தது முதல் நாளே படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் குவிய காரணமாக அமைந்துள்ளது.

Maaveeran Budget and First Day Box Office Predictions are here

அதிகபட்சமாக 7 முதல் 8 கோடி ரூபாய் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் மாவீரன் படத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு கணிசமான மார்க்கெட் அதிகரித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 10 கோடி வசூலை மாவீரன் கடக்கும் என தெரிகிறது.

மாமன்னனை தூக்கி சாப்பிடும்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தின் ஒட்டுமொத்த வசூலை ஒரே வாரத்தில் மாவீரன் முறியடித்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் 100 கோடி வசூல் படமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X