Maaveeran Box Office - பாக்ஸ் ஆஃபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்.. வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை: Maaveeran Box Office (மாவீரன் பாக்ஸ் ஆஃபிஸ்) மாவீரன் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். டாக்டர், டான் ஆகிய படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால் அடுத்ததாக அவர் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. அவரின் கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற லிஸ்ட்டில் பிரின்ஸ் சேர்ந்தது. எனவே மாவீரன் படத்தை ரொம்பவே சிவகார்த்திகேயன் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்.

சூப்பர் ஹிட்: படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியானது. ஃபேண்டஸி ஜானரில் கதைக்களம் இருந்தாலும் மிகவும் எதார்த்தமாக ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் விதத்தில் மடோன் அஸ்வின் இயக்கியிருந்ததால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் யோகிபாபுவின் காமெடியும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் தியேட்டரில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமலும் இருந்தது.
சிவகார்த்திகேயனின் நடிப்பு: குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அனைத்துக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாழலாம் என்ற பயந்த சுபாவம் உள்ள கேரக்டராகவும், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் ஆக்ரோஷமாகவும் அவரது ட்ரான்ஸ்பர்மேஷன் ரசிக்கும்படியாகவே இருப்பதாக பலரு கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அவர் சிறப்பாக நடித்த படங்களில் மாவீரனும் ஒன்று எனவும் கருத்து எழுந்திருக்கிறது.
வசூலில் மாஸ் காட்டும் மாவீரன்: படத்துக்கு ஒருபக்கம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்க. மறுபக்கம் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 10 கோடியும், இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும் வசூலித்திருந்தது. அதேபோல் வார இறுதி நாளிலும் வசூல் நல்ல விதமாகவே அமைந்து 35 கோடி ரூபாயை நெருங்கியிருந்ததாக கூறப்பட்டது.

லேட்டஸ்ட் தகவல்: இந்நிலையில் மாவீரன் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று படமானது 4 கோடியே 50 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாவீரன் படத்தின் வசூலான 40 கோடி ரூபாய்வரை சென்றிருக்கிறது. இன்னமும் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் செல்வார்கள் என்பதால் விரைவில் 50 கோடி ரூபாயை தொட்டுவிடும். மேலும் இன்று 4 கோடி ரூபாய்வரை வசூலிக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
திருட்டுக் கதையா?: இதற்கிடையே மாவீரன் படத்தின் கதை திருட்டு கதை என்ற சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. ப்ரியதர்ஷனின் உதவி இயக்குநர் பினு சுப்பிரமணியன் எழுதிய அப்பார்ட்மெண்ட் கதையைத்தான் உல்டா செய்து மடோன் அஸ்வின் மாவீரனாக எடுத்துவிட்டார் என தகவல் பரவியதோடு அதற்கு மண்டேலா படத்தின் கேமராமேன், யோகிபாபு உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











