Maaveeran: மாவீரன் படம் நிச்சயமாக அப்படி இருக்கும்... மடோன் அஷ்வினை பாராட்டிய மாரி செல்வராஜ்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.
மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், மாவீரன் ட்ரெய்லரை பாராட்டி பேசியது வைரலாகி வருகிறது.

மாவீரன் மடோன் அஷ்வினை பாராட்டிய மாரி செல்வராஜ்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது. மடோன் அஷ்வினின் இரண்டாவது படமாக உருவாகியுள்ள மாவீரனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தனது முதல் படமான மண்டேலா மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஷ்வின், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருந்தார்.
யோகி பாபு நடிப்பில் வாக்கு அரசியலை பின்னணியாகக் கொண்டு சர்ச்சையான கதையை நேர்த்தியாக எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியுள்ள மாவீரன் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்தியேன் ஜோடியாக அதிதி ஷங்கர், வில்லனாக மிஷ்கின் நடிக்க, யோகி பாபு, சரிதா ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்றது. சாய் ராம் பொறியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மடோன் அஷ்வின் உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் உட்பட மேலும் பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த ட்ரெய்லர் குறித்து பேசிய மாரி செல்வராஜ், மாவீரன் இயக்குநர் மடோன் அஷ்வினை பாராட்டினார். "முதல் படத்திலேயே சர்ச்சை மிகுந்த கதையை எடுத்து தேசிய விருது பெற்ற மடோன் அஷ்வின், மாவீரனில் சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவை சிறப்பாக பயன்படுத்தியிருப்பார் என்பது ட்ரெய்லரிலேயே தெரிந்துவிட்டது. நிச்சயமாக மாவீரன் சமூக செய்தி கொண்ட படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" எனக் கூறினார்.
மாரி செல்வராஜ்ஜின் இந்த பாராட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது, கடந்த வாரம் தான் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் வெளியானது. சமூக நீதி அரசியலை பேசிய மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயனின் மாவீரன் குறித்தும் பாசிட்டிவாக பேசியுள்ளார். இதனிடையே மாவீரன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











