twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனித் தமிழ்நாடு கோரிய தமிழர் விடுதலைப் படை தமிழரசன் பற்றியதா சுசீந்தரனின் மாவீரன் கிட்டு படம்?

    By Mathi
    |

    சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மாவீரன் கிட்டு என்ற படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தளபதி கிட்டுவின் வாழ்க்கை வரலாறா? என்பது குறித்து இயக்குநர் சுசீந்தரன் விளக்கம் அளித்துள்ளார்.

    சுசீந்திரனும் விஷ்ணு விஷாலும் 3-வது முறையாக இணையும் படம் மாவீரன் கிட்டு. இதில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன், சூரி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

    Maaveeran Kittu not on LTTE leader, says Suseenthiran

    இந்த படத்துக்கான பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன், மாத்தையாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தளபதி கிட்டு. இலங்கை அரசுடனான யுத்தத்தில் ஒரு காலை இழந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டவர்.

    இலங்கை அரசுடனான சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களுடன் 1993-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இலங்கை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது சென்னை அருகே இந்திய கடற்படையால் அவர் பயணம் செய்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் இந்திய கடற்படையிடம் சிக்காமல் கப்பலை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.

    இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது மாவீரன் கிட்டு என்ற பெயரிலேயே சுசீந்தரன் படம் இயக்குவதால் இது கிட்டுவின் வாழ்க்கை வரலாறாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் சுசீந்தரனோ, இது விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவின் வாழ்க்கை வரலாறு கிடையாது. அதே நேரத்தில் 1980களில் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு வீரனைப் பற்றிய படம்தான் இது என்கிறார்.

    1980களில் தமிழக மக்களின் உரிமைக்கான, தனித் தமிழ்நாடு கோரி ஆயுதமேந்தி போராடியவர் தமிழர் விடுதலைப் படையின் தலைவர் தமிழரசன். காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுத்து வரும் கர்நாடகாவின் அணைகளைத் தகர்ப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக பொன்பரப்பி வங்கியில் கொள்ளையடித்து நிதி சேகரிக்க முயன்ற சம்பவத்தில் உயிரிழந்தவர் தமிழரசன். ஆகையால் அனேகமாக அவரது வாழ்க்கை வரலாற்றைத்தான் தற்போது சுசீந்தரன் 'மாவீரன் கிட்டு' என்ற பெயரில் இயக்கலாம் என தெரிகிறது.

    Read more about: maaveeran kittu ltte
    English summary
    Director Suseenthiran says his new Tamil film Maaveeran Kittu, officially launched on Friday is not based on the life of an LTTE leader who committed suicide in 1993.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X