Maaveeran Update - மாவீரன் அசத்தல் அப்டேட்.. வெளியிட்டது படக்குழு
சென்னை: Maaveeran Update (மாவீரன் அப்டேட்) மாவீரன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
பிரின்ஸ் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அவர் நடித்த இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சூழலில் பிரின்ஸ் அடைந்த தோல்வி பேசுபொருளானது. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்கு சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார்.
மடோன் அஸ்வின்: மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். யோகிபாபுவை வைத்து காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை அந்தப் படத்தில் பேசி கவனம் ஈர்த்த அவர் அப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். எனவே மடோன் அஸ்வின் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என பலர் கணித்திருக்கின்றனர். அவர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயண்ட்: மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
டப்பிங் பணியை முடித்த சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு சென்றார் சிவா. அந்தப் படத்தில் ராணுவ வீரராக அவர் நடிக்கிறார் என கூறப்படும் சூழலில் ஜிம்மில் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வேறுமாதிரியான லுக்கில் வலம் வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில்தான் மாவீரன் படத்துக்கான டப்பிங் பணியை முடித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.
புதிய அப்டேட்: இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி மாவீரன் படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பிரபல நிறுவனமான ஹாம்சினி மற்றும் ஹகிம்சா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கிடையே படத்தில் இடம்பெற்றிருக்கும் வண்ணாரப்பேட்டையில என்ற பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் பாடியிருந்தனர்


Click it and Unblock the Notifications











