Maaveeran: ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்... உலகம் முழுவதும் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இதனால், முதல் இரண்டு நாட்களும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியான இன்றும் உலகம் முழுவதும் மாவீரன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

 Maaveeran: Maaveeran Has Taken a Very Good Opening at Worldwide Box Office

உலகம் முழுவதும் மாஸ் காட்டும் மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் (ஜூலை 14) ரிலீஸானது. இப்படத்தில் வழக்கமான ரூட்டை விட்டுவிட்டு, நடிப்பில் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆக்‌ஷன், காமெடி, புதுமை என ஆல் இன் ஆல் பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது மாவீரன்.

மடோன் அஸ்வின் மேக்கிங் ப்ளஸ் சிவகார்த்திகேயன் நடிப்பும் தான் மாவீரன் வெற்றிக்கு காரணமான மேஜிக் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும் படத்தின் வெற்றிக்கு சைலண்டாக கை கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்காக சம்பளமே வாங்காமல் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், யோகி பாபுவின் காமெடி, மிஷ்கினின் வில்லத்தனம், பரத் சங்கரின் இசை என ஒட்டுமொத்தமாக மாவீரன் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகியுள்ளது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே தடுமாறி நின்ற சிவகார்த்திகேயனுக்கு, மாவீரன் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் கல்லா கட்டி வருகிறது மாவீரன்.

இந்த வாரம் திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் மாவீரன் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. இதனால் தனிக்காட்டு ராஜாவாக பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடி வசூலித்த மாவீரன், இரண்டாவது நாளான நேற்றும் 10 கோடி வரை கலெக்‌ஷன் செய்திருந்ததாம். இந்நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமையான இன்று, மாவீரன் இன்னும் அதிரி புதிரியாக வசூலித்து வருகிறது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மாவீரனுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. மகாவீரடு என்ற டைட்டிலில் வெளியான மாவீரன், இரண்டு நாட்களில் 4 முதல் 5 கோடி வசூலித்துள்ளதாம். அதேபோல், உலகம் முழுவதும் மாவீரன் படத்தின் வசூல் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம். முக்கியமாக ஞாயிற்றுக் கிழமையான இன்று மாவீரன் டிக்கெட் புக்கிங் தாறுமாறாக இருப்பதாகவும், பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் முதல் வார இறுதிக்குள் படத்தின் மொத்த பட்ஜெட்டான 35 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டிலும் மாவீரன் இணைந்துவிடும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X