’கூலி’ டீமை சந்தித்த ’மாவீரன்’.. அடடா.. லோகேஷ் கனகராஜ் என்ன குக் பண்றாரு தெரியலையே?

சென்னை: விஜய் படம், ரஜினிகாந்த் படம் என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் தன்னுடைய உச்சத்தை தொட்டுக் கொண்டே செல்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், 'கூலி' படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படமாக 'கூலி' திரைப்படம் உருவாகி வருகிறது.

Maaveeran meets Coolie team for a special event photo trending

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் சமீபத்தில் முடித்த நிலையில் அபுதாபிக்கு ஓய்வுக்காக சென்றிருக்கிறார். அடுத்ததாக விரைவில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி டீமுடன் மாவீரன்: நடிகர் சிவகார்த்திகேயன் கூலி படத்தின் டைரக்‌ஷன் டீமை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் புகைப்படத்தில் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குநர்கள் இணைந்துள்ளனர்.

என்ன ஸ்பெஷல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சந்துரு அன்பழகன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கூலி படத்தில் ரத்தின குமாருக்கு பதிலாக சந்துரு அன்பழகன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் டீமில் இணைந்துள்ள நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தான் சிவகார்த்திகேயன் வந்திருக்கிறார்.

கோட் மற்றும் கூலி: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் சிஜி கேமியோவாக விஜயகாந்த் வரவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல ரஜினிகாந்தின் கூலி படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமரன் எப்போ?: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை குறி வைத்து படங்களை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X