மாவீரன் திருட்டுக் கதை இல்லையாம்.. இத்தனை படங்களில் இருந்து சுட்டக் கதையாம்.. தெறிக்கும் ட்ரோல்!
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வெளியாகி ஒரு பக்கம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இன்னொரு புறம் அந்த படம் அபார்ட்மென்ட் எனும் பெயரில் இன்னொரு இயக்குநர் உருவாக்க வைத்திருந்த கதையை திருடி எடுக்கப்பட்டதாக புகார்கள் குவிந்தன.
மேலும், கொரிய படத்தில் வரும் வாய்ஸ் ஓவர் விஷயத்தையும் காப்பி அடித்து இயக்குநர் மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியதாக ப்ளூ சட்டை மாறனும் ட்வீட் போட்டிருந்தார்.
இந்நிலையில், மாவீரன் படம் பல மசாலா படங்களின் கலவை என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ள ட்ரோல் மீம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

திருட்டுக் கதை சர்ச்சை: பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் இப்படி தொடர்ந்து திருட்டுக் கதை சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதற்கொண்டு படத்தின் கதை வரை இளம் இயக்குநர்கள் வெளிநாட்டு படங்கள் முதல் உள்ளூர் மற்றும் உதவி இயக்குநர்கள் கதை வரை திருடி எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்து வருகின்றன.
மாவீரன் படமும் தற்போது அப்படியொரு பிரச்சனையில் தான் சிக்கி உள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினா இப்படியொரு வேலையை செய்திருக்கிறார் என பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.ர்
குவியும் ட்ரோல்கள்: சொந்த கதையாக இல்லாததால் தான் படத்தின் இரண்டாம் பாதி சொதப்பி விட்டது என்றும் கிளைமேக்ஸ் அப்படியே டாக்டர் படத்தின் காப்பி என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
மேலும், முதல் பாதி நல்லா இருப்பதால் அரை டிக்கெட் கொடுங்க என்றும் மாவீரன் படத்தை பாரு, அனால், கிளைமேக்ஸுக்கு முன்பாக எழுந்து வந்து விடு போன்ற மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.
பல படங்களின் காப்பி: இயக்குநர் அட்லீ இயக்கும் படங்களின் ஒவ்வொரு சீனும் பல படங்களில் இருந்து சுட்டு எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடுத்து வரப் போகும் ஜவான் படம் வரை எழுந்துள்ள நிலையில், மாவீரன் படத்துக்கும் அப்படியொரு விமர்சனம் எழுந்துள்ளது.

மாவீரனின் இன்ட்ரோ குப்பத்தில் வாழும் ஹீரோ என்பதால் வேலைக்காரன் படத்தின் காப்பி என்றும் ஹீரோ கேரக்டர் பயந்தாங்கொள்ளி என்பதால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அபார்ட்மென்ட் ஊழல் காரணமாக இடிந்து விழுவது ரமணா படத்திலேயே காட்டிட்டாங்க என்றும், படத்தின் கிளைமேக்ஸில் அந்த ஒரு குழந்தையை காப்பாற்ற ஹீரோ செல்லும் சீன் அப்படியே சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் இருந்து உருவியது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











