Blue Sattai: உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறனுக்கு மாவீரன் படத் தயாரிப்பாளர் கேள்வி!

சென்னை: கடந்த சில வாரங்களாக பெரிய படங்கள் வராமல் இருந்து வந்த நிலையில், சைலன்ட் மோடில் இருந்த ப்ளூ சட்டை மாறன் மாமன்னன் படம் ரிலீஸ் ஆனதும் உதயநிதி ஸ்டாலின் பற்றி மட்டும் பேசாமல் மற்ற விஷயங்களை பேசி சர்ச்சை ட்வீட்களை போட்டு வந்தார்.

இந்நிலையில், அடுத்து அவருக்கு தொக்காக சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் சிக்கி உள்ளது. அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு மிஷ்கின், சரிதா என படத்தில் நடித்த பலரும் பேசியதை ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் போட்ட ஒரு ட்வீட் மாவீரன் படத்தின் தயாரிப்பாளரின் பொறுமையையே சோதித்து விட்டது.

இந்நிலையில், அதிரடியாக உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா ப்ளூ சட்டை மாறன் சார்? என்றே கேள்வி எழுப்பி உள்ளார் மாவீரன் படத் தயாரிப்பாளர் அருண் விஸ்வா.

Maaveeran Producer blasts Blue Sattai Maran for his troll on Sivakarthikeyan

சண்டையில் கிழியாத சட்டை: ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்து ட்வீட் போட்டும் அவர்கள் நடித்த படங்களை கடுமையாக விமர்சித்தும் சர்ச்சை விமர்சகராக வலம் வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சில நல்ல படங்களை ப்ளூ சட்டை மாறன் பாராட்டி விட்டால், அந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் அசோக் செல்வனின் போர் தொழில் படத்தை பாராட்டி இருந்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபை வெகுவாக பாராட்டி விட்டு இரண்டாம் பாதியில் இருந்த குறைகளையும் சுட்டிக் காட்டி இருந்தார். ஏகப்பட்ட சண்டை போட்டாலும் இந்த ப்ளூ சட்டை கிழியாமல் தப்பித்து வருகிறது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மாவீரன் பக்கம் திரும்பிய கத்தி: மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய படமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தை சுற்றி ட்ரோல்களையும் விமர்சன ட்வீட்களையும் பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

படத்தின் டிரெய்லர் வெளியீடு தாமதம் ஆகும் என்கிற அறிவிப்பு வந்தபோதே, ஒன்றும் அவசியமில்லை பொறுமையாக வரட்டும் என சொன்ன ப்ளூ சட்டை, ரஜினியுடன் சிவகார்த்திகேயனை கம்பேர் செய்ததை வன்மையாக கண்டித்தார்.

Maaveeran Producer blasts Blue Sattai Maran for his troll on Sivakarthikeyan

டாம் க்ரூஸுடன் கம்பேரிஸன்: மேலும், "மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்... 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது. 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' மொமன்ட்." என ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் முன்பாக மாவீரன் ஒன்றுமில்லை என்பது போல ட்வீட் போட்டு மாவீரன் படத்தின் தயாரிப்பாளரையே டென்ஷனாக்கி விட்டார்.

Maaveeran Producer blasts Blue Sattai Maran for his troll on Sivakarthikeyan

மல்லுக்கு வந்த மாவீரன் தயாரிப்பாளர்: வணக்கம் சார்.. என் பேரு அருண் விஸ்வா.. நான் தான் மாவீரன் படத்தோட தயாரிப்பாளர். எனக்கு என் படம் தான் மிஷன் இம்பாசிபிள், அவதார், ஆர்ஆர்ஆர் எல்லாமே.. உங்க வயசுக்கு இப்படியொரு பிக்கை ஷேர் பண்ணி நீங்க இதை பண்ணியிருக்க வேண்டாம் சார்" என ரொம்ப மரியாதையாக ப்ளூ சட்டை மாறனுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் பெருசா கண்டுக்காதீங்க சார், உங்க ட்வீட்டையும் வச்சு அவர் மைலேஜ் தேடிக் கொள்வார். அப்படி இல்லையென்றால் படம் வெளியானால் நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பார் என எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X