Maaveeran: நண்பனால் மோசம் போன சிவகார்த்திகேயன்... மாவீரன் ரிலீஸுக்கு வந்த சிக்கல்

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

மாவீரன் திரைப்படம் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் சொன்னபடி ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாவதில் சந்தேகம் என சொல்லப்படுகிறது.

 Maaveeran: Sivakarthikeyans Maaveeran will be delayed due to Rajinikanths Jailer

மாவீரன் ரிலீஸாவதில் சிக்கல்:கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்தப் படம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர், வில்லனாக மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாவீரன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ம் தேதி மாவீரன் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அயலான் படத்தின் ரிலீஸ் தேதியையும் சிவகார்த்திகேயன் கன்ஃபார்ம் செய்திருந்தார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஆனால், தற்போது மாவீரன் திரைப்படம் சொன்ன தேதியில் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். சிவகார்த்திகேயனின் நண்பனே இதற்கு காரணமாக இருப்பது தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சனும் சின்ன திரையில் ஒன்றாக பயணித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக தான் நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார். ஆனால், அதற்கடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படுதோல்வியடைந்தது. இதனால் நெல்சனை இப்போது வரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. மாவீரன் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தும், ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார் நெல்சன். சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பராக இருந்தும் நெல்சன் இப்படி செய்யலாமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 Maaveeran: Sivakarthikeyans Maaveeran will be delayed due to Rajinikanths Jailer

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது நண்பர் நெல்சனின் வெற்றிக்காக மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்றவுள்ளாராம். அதன்படி ஜூலை மாதம் இறுதியில் மாவீரன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பனுக்காக மிக பெருந்தன்மையாக மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முறையாக ரஜினி - சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஒன்றாக போட்டிப் போடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அது நடக்குமா என்பது சந்தேகமே. அதேநேரம் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X