Maaveeran: விளம்பரத்துக்கு ஒரு விளம்பரம்.. மாஸ் காட்டும் மாவீரன்!
சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.
மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படம் ரசிகர்களிடையே சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு அதிகமான பிரமோஷன்களை கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்து வருகின்றனர்.
பிரமோஷன்களுக்கு பிரமோஷன் வீடியோ வெளியிட்ட மாவீரன் படக்குழு: நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் மண்டேலா புகழ் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள படம் மாவீரன். இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களான டாக்டர், டான் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சொதப்பலாக அமைந்தது. இதையடுத்து தற்போது வெளியாகும் மாவீரன் படம் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கமல் தயாரிப்பில் எஸ்கே22 படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சூட்டிங்கில் பங்கேற்று வந்த சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தின் ப்ரமோஷன்களுக்காக தற்போது சூட்டிங்கை நிறுத்திவிட்டு வந்துள்ளார். அவர் அடுத்தடுத்து சென்னை, கொச்சி, பெங்களூர், ஐதராபாத் என தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பிரமோஷன்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நாளைய தினம் வெளியாகவுள்ள மாவீரன் படத்திற்காக அதிகமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் ரயில்களிலும்கூட இந்தப் படத்தின் பிரமோஷன்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் அதிகமான இந்த விளம்பரங்களுக்கு மேலும் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு சிறுமியும் அவரது அம்மாவும் இருப்பது போல இந்த வீடியோ அமைந்துள்ளது.

காலையில் பள்ளிக்கு கிளம்பும் அந்த சிறுமி, டிவியில் மாவீரன் ப்ரமோவை பார்ப்பதாகவும், செய்தித்தாளில் காணப்படும் விளம்பரத்தை பார்ப்பது போலவும் அந்த வீடியோவில் அமைந்துள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் வழியெங்கிலும், பேனர்கள், ரயிலில் காணப்படும் விளம்பரங்கள், பேருந்து நிலையத்தில் விளம்பரம் என அடுத்தடுத்து படத்திற்காக செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் இந்த வீடியோவில் காட்சிப்படுததப்பட்டுள்ளது. வீடியோவில் முடிவில், விளம்பரத்துக்கு ஒரு விளம்பரம் அவ்ளோ தான் என்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படத்திற்கு அதிகமான விளம்பரங்கள் செய்யப்படுவது வாடிக்கையானதுதான். ஆனால் இவை அனைத்தையும் ரசிகர்கள் அனைவரும் அறிந்துக் கொள்வது சாத்தியமில்லாதது. இந்நிலையில், படத்திற்காக செய்யப்பட்டுள்ள அதிகமான விளம்பரங்கள் அனைத்தையும் ஒரே வீடியோவில் அடக்கி, விளம்பரத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு இந்த வீடியோ வித்தியாசமான முயற்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











