பாராட்டு மழையில் நனையும் ‘மாயபிம்பம்‘ படம் எப்படி இருக்கு? ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்!

சென்னை: செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'மாயபிம்பம்'.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதை: மாயபிம்பம் படத்தினுடைய கதாநாயகன் ஒரு மருத்துவ கல்லூரி மாணவராக இருக்கிறார். அவருக்கு நான்கு நண்பர்கள். இவர்களில் ஒருவன் மட்டும் எப்போதும், பெண்களைப் பற்றி தவறாகவே பேசிக்கொண்டு இருப்பார். நண்பன் அடிக்கடி பெண்களை பற்றி தவறாக பேசியதால், கதாநாயகன் மனதில் பெண்கள் என்றாலே தவறானவர்களாக தான் இருப்பார்கள் என்கிற எண்ணம் வந்து விடுகிறது. இந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணுடன் ஹீரோவிற்கு காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகன் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்திலேயே பழகுகிறான். கடைசியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது அது என்ன என்பது தான் மாயபிம்பம் திரைப்படத்தின் கதை.

blue sattai Maaran review
Photo Credit:

அனைவரும் புதுமுகம்: இந்த படத்தில் நடித்த அனைவருமே புது முகங்கள். 2005 ஆம் ஆண்டு கதைகளத்தை கொண்ட ஒரு பீரியாட்ரி படத்தை எடுத்திருக்கிறார்கள். அப்படி எடுத்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேலை அப்போது உண்மையான காதல் என்றால் ஒரு காதல் தான் இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் உண்மையான காதல் என்றால் அது 100 காதலாக இருக்கிறது. அதை சொல்வதற்கு கூட இயக்குநர் இப்படி படத்தை எடுத்து இருக்கலாம். படத்தினுடைய முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. எப்பொழுதுமே நான்கு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு பெண்களைப் பற்றிய பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களைப் பற்றி ஹீரோவிற்கு தவறான எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவே பல காட்சிகள் அதுபோல வைக்கப்பட்டுள்ளன. படம் இடைவேளை வரை மெதுவாக சென்றாலும், இடைவேளையில் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.

நல்ல படம்: இரண்டாவது பாதியில் பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக ஹீரோயினுடைய அம்மா எப்படிப்பட்டவர்கள் என்பதை அவரின் கதாபாத்திரமம் வராமலே சொல்லப்பட்ட விதம் ரசிக்கும் படி இருந்தது. அதேபோல கிளைமாக்ஸ் மிகவும் அதிர்ச்சியான கிளைமாக்ஸாக இருந்தது. இப்போது வரும் படங்களில் போதை பொருள், ஆள் கடத்தல், அடிதடி ரத்தம் என எதையாவது சொல்லி, படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், மாயபிம்பம் திரைப்படம் 80 மற்றும் 90 காலகட்டத்தில் வருவது போல உண்மையான காதல் கதையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் மாயபிம்பம் நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்த படம் பெண்களுக்கு பிடிக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X