சிவனின் அழகான பார்வதி.. ‘பிந்து மாதவி‘ மாயனின் புதிய போஸ்ட்

சென்னை : மாயன் படத்தின் போட்டோசூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் பார்வதியாக பிந்து காட்சி அளிக்கிறார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பிந்துவா இது என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார் அவர்.

நடிகை பிந்து மாதவி ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தார். 2011ல் வெளிவந்த கழுகு படத்தின் வெற்றிக்கு பிறகு நிரந்தர தமிழ் நடிகையாக மாறி போனார் பிந்து மாதவி. அடுத்ததாக தேசிங்கு ராஜா படத்தில் நடித்து ஒரு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார் இவர். தொடர்ந்து 8 வருடங்களாக தமிழிலே நடித்து வருகிறார்.

Maayan new photos out

தமிழில் சரியாக வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதை அடுத்து, தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள, கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Maayan new photos out

அப்படி தேர்வு செய்யப்பட்ட படம் தான் மாயன். கற்பனை நிறைந்த கடவுள் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை ராக்ஸ்டார் அனிரூத் ஏற்கனவே வெளியாகி விட்டது. தற்போது இந்த படத்தின் போட்டோசூட்டிற்காக எடுக்கபட்ட சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில், பிந்து பார்வதி வேடத்திலும், வினோத் சிவன் வேடத்திலும் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, பிந்துவா இது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது பிந்துவின் பார்வை.

Maayan new photos out

பிந்து மாதவி, இது வரையில் மெல்லினமான பெண்ணாக தான் அதிகம் நடித்து நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் கோவம் வந்தால் பாய்ந்து பாய்ந்து அடிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள இந்த போஸ்டர்களை பார்க்கும் போது பிந்து பார்வதி வேடத்தில் மிகுந்த ரௌத்திரம் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரிகிறது.

Maayan new photos out

இந்த படத்தை ஜெ.ராஜேஷ் கண்ணன் இயக்கி வருகிறார். பிந்து தற்போது கழுகு 2, மாயன் படங்களில் நடித்து வருகிறார். புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கிய ரஞ்சித்தின் ஜெயகோடி ஆகிய படங்கள் அவரின் கைவசம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X