பாய்ஸ் vs கேர்ள்ஸ்.. வைரலாகும் மாயநதி படத்தின் சுவாரஸ்யமான மீம்கள்.. இதை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended Video
சென்னை: டாக்டர் அசோக் தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ள மாயநதி திரைப்படம் நேற்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் தயாரிப்பில் அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள மாயநதி படத்தில் அபி சரவணன் மற்றும் வெண்பா லீடு ரோலில் நடித்துள்ளனர்.
2 மணி நேரம் 5 நிமிடம் ஓடும் க்ரிஸ்ப்பான இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார்.
இந்த படம் குறித்த மீம்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சுவாரஸ்யமான சில மீம்கள் இதோ உங்களுக்காக..
பத்து டிக்கெட் வேணும்
டாக்டர் அசோத் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள மாயநதி படம் குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாயநதி படத்துக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்பதும், அதற்கு பத்து என்ன பதினைஞ்சு டிக்கெட் தருகிறோம் என சந்தானம் கூறுவது போன்ற மீம்கள் ரசிக்க வைக்கின்றன.
அப்பா – மகள் பாசம்
மாயநதி படத்தில் நாயகி வெண்பா மற்றும் ஆடுகளம் நரேனுக்கு இடையே இருக்கும் அப்பா - மகள் பாசம் அழகாக காட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வரும் வெண்பா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு ஏற்படும் காதல் பிரச்சனைகளும், அப்பா - மகள் உறவையும் அழகாக காட்டியுள்ளனர் என இந்த மீம் எடுத்துரைக்கிறது.
எக்ஸாம் மீம்
மாயநதி படத்தின் நாயகி வெண்பாவை வைத்து பல மீம்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதிலும், பெண்கள் தேர்வு நேரங்களில், அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து கேள்வி வந்துடுமோ என யோசிப்பதாகவும், பசங்க ரோல் நம்பர் ஃபர்ஸ்ட் பெஞ்சுல வந்துடுமோ என யோசிப்பதாகவும் உள்ள மீம்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
கேம்பஸ் மீம்
மாயநதி படத்தில் வெண்பாவின் அப்பாவாக நடித்துள்ள நரேன் தனது மகளுடன் பேசும் வசனத்தை காலேஜ் மேனேஜ்மென்ட் மாணவர்களிடம், நம்ம காலேஜுக்கு பெரிய கம்பெனியில இருந்து கேம்பஸ் வந்துருக்கு என்று சொல்வதும், பசங்க, எது கால் சென்ட்டரா என்று கலாய்ப்பதுமாக இந்த மீம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
ஸ்டேட் ஃபர்ஸ்ட் மீம்
எல்லா மீம்களை விட இந்த மீம் தான் இருப்பதிலேயே செம்ம ஹைலைட். அப்பாவிடம் பெண் குழந்தைகள் அப்பா நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்து பெருமை சேர்ப்பேன் என்று சொல்வது போலவும், அதுவே ஆண் குழந்தைகள் என்றால், நான் எல்லாம் பாஸ் ஆகுறதே உனக்கு பெருமை தான் என வடிவேல் பாணியில் மீம் போட்டு மிரட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











