ராஜா பவதாரணி இசையில் .. மெலோடி சாங்.. கஞ்சப்பார்வை கவிதையாகுதே !

சென்னை : மாயநதி படத்தில் வரும் கஞ்சப்பார்வை கவிதையாகுதே பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாயநதி படத்தில் இசைஞானியின் மகள் இசையமைத்து இருக்கிறார் என்றவுடனே படத்தின் பாடல்களை பற்றிய ஈர்ப்பு ரசிகர்களுக்கு வந்து விட்டது. ஒரு பட வெளியீட்டின் முறை என்பது ஒரு படம் வெளியாகும் முன்னரே படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை வெளியிடுவார்கள் .

Maayanadhi tamil movie kanja paarvai trending song

எப்போதுமே படத்திற்கு அதிகமாக விளம்பரம் தேடி தருவது பாடல்கள் என்று கூட சொல்லலாம். அப்படி மாயநதி படத்திற்கும் மூன்று பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதில் மிக முக்கியமாக கஞ்ச பார்வை பாடல் பலரின் பிடித்தமான பாடல் என்று கூட சொல்லலாம் .

கஞ்ச பார்வை கவிதையாகுதே எனும் பாடலின் வரிகள் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்கள் அனைத்தையும் வெளியிட்டது யுவன் சங்கர் ராஜாவின் யூடியூப் பக்கமாகும் .

Maayanadhi tamil movie kanja paarvai trending song

கஞ்ச பார்வை பாடலின் வரிகளை எழுதியுள்ளார் பிரபல பாடலாசிரியரான யுகபாரதி. பாடலை பாடியிருக்கிறார்கள் ப்ரியங்கா மற்றும் செந்தில் தாஸ் . பாடலை பதிவு செய்திருக்கிறார் லிகேஷ் குமார். இந்த பாடலின் வரிகள் மிக அழகாக இருந்ததும் அதற்கேற்ற மெல்லிசை சரியான விதத்தில் அமைந்தது பாடலின் வெற்றி. பாடலின் ஆரம்பத்தில் சிறியதாக இளையராஜாவின் கை வண்ணம் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. பவதாரணி இளையராஜா மகள் என்பதனால் கூட இது நிகழ்திருக்கலாம்.

Maayanadhi tamil movie kanja paarvai trending song

பவதாரணியை பலருக்கும் தெரியாமல் இருக்காது இவர் பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் மேலும் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் மை டியர் குட்டிச்சாத்தன் படத்தில் கூட ஒரு பாடலை பாடியிருப்பார். இதுவரையில் பவதாரணி பத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

Maayanadhi tamil movie kanja paarvai trending song

கஞ்ச பார்வை பாடல் வரிகள் பாடலாசிரியர் யுகபாரதி கை வண்ணத்தில் உருவானது. இந்த பாடல் வெற்றி பெற அவரின் வரிகள் பெரிதும் உதவி உள்ளது. பாடலில் வரும் காட்சிகளும் நன்றாக வடிமைக்கபட்டிருந்து. வெண்பா மற்றும் அபிசரவணன் இடையில் இருக்கும் வெளிப்படுத்த முடியாத காதல் பார்வையினால் வெளிபடுவதை மிக அழகாக பாடலாக்கி இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X