வெற்றிப் பாய்ச்சல்.. பெண்களின் வெற்றி.. தூயநதியாக பாய்கிறது மாயநதி!
Recommended Video
சென்னை: டாக்டர் அசோக் தியாகராஜனின் ராஜி நிலா முகில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாயநதி திரைப்படம் நேற்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அபி சரவணன், வெண்பா, அப்புக்குட்டி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் மாயநதியில் நடித்துள்ளனர்.
தந்தை - மகளின் பாசத்தையும், பருவ வயதில் வரும் மாற்றத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார் இயக்குநர் அசோக் தியாகராஜன்.
வெற்றிப் பாய்ச்சல்
தாயில்லாமல் மகளை வளர்க்கும் பாசமான தந்தையாக ஆடுகளம் நரேன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியாகவும், பருவ வயதில் வரும் காதலில் சிக்கித் தவிக்கும் டீன் ஏஜ் பெண்ணாக வெண்பா தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தியேட்டர்களில் மாயநதி வெற்றிப் பாய்ச்சலாக பாய்கிறது.
ஃபீல் குட் மூவி
மருத்துவராக பணியாற்றி வந்த அசோக் தியாகராஜன் சினிமா மீது ஏற்பட்ட காதலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி லோ பட்ஜெட்டில் நல்ல தரமான படத்தை கொடுக்க வேண்டும் என தனது மொத்த முயற்சிகளையும் கொட்டி இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே ஃபீல் குட் மூவி என்ற பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
பெரிய பிளஸ்
மாயநதி படத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பிளஸ் என்றால் அது இளையராஜாவின் மகள் பவதாரினியின் இசை தான். மயில் இறகு, கஞ்சா பார்வை கவிதை ஆகுதே, யாவும் இங்கு நீதான் அப்பா என அருமையான மூன்று பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார். இந்த மூன்று பாடல்களையும் யுகபாரதியின் வரிகள் மேலும் சிறப்பாக மாற்றியுள்ளன.
பெண்ணின் வெற்றி
அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகியுள்ள மாயநதி படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி வாகை சூடி தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி பெண்களுக்கு கிடைத்த வெற்றி என இன்றைய பேப்பர் விளம்பரத்தில் படக்குழு குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











