பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு மழையில் நனைந்த மாயநதி திரைப்படம்

Recommended Video

Maayanadhi Venba’s Life time dream | Abi Saravanan | Venba | Adukalam Naren

சென்னை: மாயநதி படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து ஒரு தலைமையாசிரியர் விமர்சனம் செய்து உள்ளார்.

இது போன்ற பல விமர்சனங்கள் படத்திற்கு தேவை ஒரு படம் வெற்றி பெற ஆடியன்ஸ் கருத்து நிச்சயம் வேண்டும். இவர் எழுதி உள்ள அந்த விமர்சனம் தற்போது டிரென்டு ஆக உள்ளது. அவர் எழுதி உள்ள விமர்சனம்

maayanathi movie for the young generation

சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய காலச்சூழலில் பள்ளிப் பருவ குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராக இன்றைய பதின்ம வயது குழந்தைகளின் உளச் சிக்கல்களை கையாள்வதில் மிகுந்த கவனத்துடனே செயல்பட வேண்டியுள்ளது. பதின்ம வயது பள்ளிப் பருவ குழந்தையின் காதலை சொல்லியுள்ள படம் தான் மாயநதி. இதனை கேள்விபட்டு பதினைந்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து இப் படத்தினை காணச் சென்றிருந்தோம்.

கதையை அவரது ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்

maayanathi movie for the young generation

பதின் வயதில் வரும் பாலின கவர்ச்சியை காதல் எனக் கருதி குழந்தைகள் தனது லட்சியத்தையும் வாழ்க்கையையும் எப்படி இழக்கிறார்கள் என்பதை மிக நுணுக்கமாக ஆபாசம் ஏதுமில்லாமல் தெளிவாக படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர். வாழ்த்துகள் அசோக் சார்.

தான் பிறக்கும்போதே தாயை இழந்த வெண்பா தாயுமானவனான தனது தந்தை ஆடுகளம் நரேன் வளர்ப்பில் பிரசவம் பார்க்கும் மருத்துவராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்கிறார். இவரது வாழ்க்கையில் ஆட்டோ டிரைவரான அபிசரவணன் நுழைய காதல் மலர அக்காதல் அவரது வாழ்க்கையை எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை ஒரு கவிதைப் போல சொல்லியிருக்கும் படமே மாயநதி.

அபிசரவணன் பற்றி அவர் எழுதி உள்ள விமர்சனத்தில் கூறியுள்ளதாவது

maayanathi movie for the young generation

அட நம்ம மதுரக்கார புள்ள. சமூகத்தில நிறைய உதவிகள் செய்றவரு. இந்தப் படத்தில சும்மா பட்டைய கிளப்பிருக்காரு. நமக்குத் தெரிந்த நாம் தினசரி பார்க்கிற ஒரு ஆட்டோக்காரர் கலகலப்பாக ஜாலி பேர்வழியாக எத்தகைய உடல்மொழிகளை கொண்டு இருப்பாரோ அவ்வாறே இயல்பாக மிக எதார்த்தமாக நடித்துள்ளார். இல்லையில்லை ஆட்டோக்காரராகவே வாழ்ந்துள்ளார். பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ஆட்டோக்காரராக நடித்திருப்பார். அப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதே போல அபிசரவணனுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வெண்பாவுடன் காதல், அக்காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற பதைபதைப்பு, திருமணம் முடிந்த பின்பு கீ செயினை பார்த்தவுடன் குற்ற உணர்ச்சி என தனது நடிப்பின் பல பரிமாணங்களை
வெளிப்படுத்தி திரையுலகில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். நிஜ வாழ்க்கையில் ஹீரோ வாக இருக்கும் அபிசரவணன் இனி சினிமா உலகிலும் குறிப்பிடத்தக்க ஹீரோ வாக வலம் வருவார்.

வெண்பாவை பற்றி அவர் கூறிய தகவல்

தந்தை பாசம், மருத்துவர் கனவு, அபியுடன் காதல் என முப்பரிமாணங்களில் மிளிர்கிறார். தாலி கழுத்தில் ஏறிய ஒரு சில நிமிடங்களில் எதிர்பாரதவிதமாக தந்தையை சந்திக்க 'ஒண்ணுமில்லப்பா, வீட்டுக்கு வந்துறுவேன்பா எனக் கூறும்போது தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். முகபாவங்கள் அருமை.

சீனியர் நடிகர் ஆடுகளம் நரேன் தாயுமானவனாக பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். அப்புக்குட்டி, கார்த்திக் ராஜா இருவரது நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

பவதாரணியின் இசையைக் குறிப்பிடாமல் இவ் விமர்சனத்தை முடிக்க முடியவில்லை. மஸ்தானா மஸ்தானா என்ற முதல் பாடலில் பாடி அசத்தியுள்ளதைப் போல இப்படத்திலும் அசத்தியுள்ளார். புலிக்கு பிறந்ததல்லாவா?

மொத்தத்தில் மாயநதி பதின்ம வயது குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு குழந்தையும் காண வேண்டிய துளியும் ஆபாசமில்லாத குடும்பப்படம்.

வைகை நதி மட்டுமல்ல மாயநதியும் எனக்குப் பிடித்துள்ளது.

தியேட்டரில் சென்று படத்தைப் பாருங்கள்.

இது போன்ற பலர் பல்வேறு விமர்சனங்களை மாயநதி படத்தின் மீது வைக்கின்றனர். விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக தான் வந்து கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்து சாமானிய மக்கள் ரசிகர்கள் பாராட்டை பெறுவது படங்களுக்கு சற்று கடினம். ஆனால் அதனை மாயநதி படம் வென்றுவிட்டது. படத்தை பார்த்து ஒரு தலைமையாசிரியர் படத்தை பாராட்டி விமர்சனம் செய்து உள்ளார்.

மேலும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மாயநதி திரைப்படம்.

இந்த படத்தை மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். தங்களது அடல்டு வயதில் செய்யும் தவறுகளை செய்யக்கூடாது அதனை திருத்தி கொள்ள மற்றும் அதிலிருந்து வெளிவர இப்படம் ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது என்று பலரிடம் இருந்து விமர்சனம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X