Maayavalai Teaser: "இந்த பிரச்சினைய யார் தொடங்குனாங்க..” மிரட்டும் அமீர்... வெளியானது மாயவலை டீசர்
சென்னை: முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர், தற்போது மாயவலை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக மாயவலை டீசர் கடந்த 5ம் தேதி வெளியாக்விருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியானது மாயவலை டீசர்
இயக்குநர் பாலாவிடம் சேது படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் அமீர். பாலாவுடன் சேது, நந்தா படங்களில் பணியாற்றிய அமீர், மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் ஆகிய படங்களை இயக்கினார். இதில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், சேரன், சினேகன, பாரதிராஜா குரல் எழுப்பியிருந்தனர். பருத்திவீரன் சர்ச்சை ஒருபக்கம் விஸ்வரூபம் எடுக்க, இன்னொரு பக்கம் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி அமீர் தற்போது மாயவலை படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றிமாறனும் அமீரும் இணைந்து மாயவலை படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் அமீரின் பிறந்தநாள் தினமான டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் மாயவலை டீசர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது மாயவலை டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வடசென்னையை தொடர்ந்து மாயவலை படத்திலும் ராஜன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் அமீர். அவரது வாய்ஸ் ஓவரில் தொடங்கும் இந்த டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அமீர், சஞ்சிதா ரெட்டி, சத்யா மூவருக்கும் இடையேயான நட்பு, காதல் பின்னணியில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது மாயவலை. பருத்திவீரன் சர்ச்சையில் அமீருக்கு சப்போர்ட் செய்த அதே கேங் தான் தற்போது மாயவலை டீசரையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாயவலை டீசரை வெற்றிமாறன், கரு பழனியப்பன், சேரன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











