'மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு..யார் இந்த லென்ஸ் காதலன்

சென்னை: தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் 'அகண்டா' படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் 'மாயோன்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வெளியிட்ட தேதி முதல்

வெளியிட்ட தேதி முதல்

பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிட்ட தேதி முதல் வசூலில் சாதனை படைத்து வருவதற்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும் காரணம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

கிஷோர் இயக்கத்தில்

கிஷோர் இயக்கத்தில்

இந்நிலையில் 'அகண்டா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத், தமிழில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மாயோன்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

உழைப்பை பாராட்டி

உழைப்பை பாராட்டி

அவர் தமிழில் அறிமுகமாகும் 'மாயோன்' படத்திலும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பை பாராட்டி 'மாயோன்' பட குழுவினர், 'அகண்டா' படத்திற்கும், ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்திற்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் பலவிதமான ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்கள் மிக பிரம்மாண்டமான படங்களை மிகவும் துல்லியமாக, காட்சிகளாக ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளனர்.

கேமரா ஜாலங்கள்

கேமரா ஜாலங்கள்

அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து தான் வட இந்தியாவுக்கு பல ஒளிப்பதிவாளர்கள் சென்று சாதனை புரிந்துள்ளனர் .அந்த வரிசையில் சமீபத்திய சாதனையாளர் ராம் பிரசாத்திற்கு சிகப்பு கம்பளம் விரித்து மிகப்பெரிய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இவருடைய கேமரா ஜாலங்கள் இனி என்னவெல்லாம் செய்யப் போகுது என்பதை . வித்தியாசமான படங்கள் ஒளிப்பதிவு செய்ய ராம்ப்ரசாத்திற்கு பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X