மாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்!

சென்னை : தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ்.

நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தைத் தொடர்ந்து நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது.

இப்பொழுது இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்துள்ளார் அதன் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது.

தரமான படங்கள்

தரமான படங்கள்

குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்கள் அதேசமயம் ரசிகர்களின் மனதுக்கு நிறைவான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்று வருபவர் நடிகர் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றி இவரின் திரைத்துறை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தனி கவனத்தை

தனி கவனத்தை

சத்யா, கபடதாரி , வால்டர் என சிபிராஜ் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்றிருக்க இப்பொழுது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியாக தன்யா நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பழமை வாய்ந்த கோயிலை

பழமை வாய்ந்த கோயிலை

5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து மாயோன் திரைப்படம் உருவாகி உள்ளது. எனவே பரபரப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை இருக்கும். சென்ற மாதம் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழு டப்பிங் பணிகளை விறுவிறு வேகத்தில் தொடங்கியுள்ளது.

முடிந்தது

முடிந்தது

அந்த வகையில் சிபிராஜ் தன்னுடைய காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்து உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X