கிட்டார் வாசித்து.. பாட்டு பாடி.. அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்து கூறிய.. மதன் பாபு குடும்பம்!
சென்னை : பாட்டு பாடி குடும்பத்துடன் அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளனர் மதன் பாபு குடும்பத்தினர்.
Recommended Video
மனிதர்கள் ஒருவரை போல் மற்றொருவர் இருப்பதில்லை, அதே போல தான் அவர்களின் திறமை,பேச்சு, சிரிப்பு எல்லாம் ஒருவரை போல் மற்றவர்களுக்கு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

அதுபோல் சிரிப்பில் தனித்துவம் வாய்ந்தவர்தான் நடிகர் மதன் பாபு. இப்படியும் ஒருவரால் சிரிக்க முடியுமா என்ற அளவிற்கு யோசிக்க வைத்தார்.100 நபர்கள் இருந்தாலும் இவரின் சிரிப்பை வைத்து கண்டுபிடித்து விடலாம் மதன் பாபு யாரென்பதை.
அப்படிப்பட்ட வித்யாசமான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் தான் நம் மதன் பாபு, ஆரம்ப காலங்களில் பின்னணி இசையமைப்பாளராக இருந்த இவர் அதன் பின் சினிமாவில் பெரிய அளவில் எப்படி பிரபலமானார் என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். 90களில் விளம்பர படங்கள் உச்சத்தை தொடும்போது பல விளம்பர படங்களுக்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல பின்னணி வாசிப்பாளர்கள் இவரின் குழுவில் இருந்தனர். அதன் பின்னர் பாலச்சந்தர் அவர்களின் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார், அதை தொடர்ந்து தேவர் மகன் படத்தில் நடித்தார் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவரின் வித்தியாசமான சிரிப்பு பலரையும் கவர்ந்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. இன்று வரை பல படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பல பிரபலங்கள் அவர்களின் போட்டோக்கள் வீடியோக்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தன் குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் மதன்பாபு அவர்களின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குடும்பத்தோடு சேர்ந்து பாட்டு பாடுகிறார். அதிலும் நம்மை வழக்கம் போல் சிரிக்கவைக்கிறார்.
மதன் பாபு தன் கையில் கிட்டார் ஒன்றை வைத்து வாசிக்கிறார் அவரின் மனைவி பாடுகிறார், பின் அவரின் பேரக்குழந்தைகள் மகள், மகன் என அனைவரும் சேர்ந்து "அஞ்சலி அஞ்சலி" என்ற பாட்டை பாடினர், பின் பாடலை பாடி முடித்தவுடன் அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்துக்களை சேர்ந்து தெரிவித்தனர். இந்த வீடியோவிலும் தன் தனித்துவமான சிரிப்பை மதன் பாபு அவர்கள் விடாமல் சிரித்து கொண்டே கிட்டார் வாசித்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் அளவில் பகிரப்பட்டு வருகிறது .


Click it and Unblock the Notifications











