மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்.. இது விஷால் படமா? சந்தானம் படமா?

சென்னை: சுந்தர். சி இயக்கும் படங்களை பார்க்க வேண்டும் என்றாலே மூளையை ஃப்ரிட்ஜில் கழட்டி வைத்து விட்டுத்தான் போய் பார்க்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் ஆரம்பித்ததும் இந்த படத்துக்கும் நெகட்டிவ் விமர்சனம் தானா என நினைத்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி படங்களை தொடர்ந்து கழுவி ஊற்றி வரும் ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனி இந்த படத்துக்கு போட்டதை போலவே பாடல்களை போட்டு இசையமைப்பாளராகவே இருந்திருக்கலாமே என்று பாராட்டியுள்ளார்.

madha gaja raja madha gaja raja review blue sattai maran

மேலும், இந்த படம் விஷால் படமா? அல்லது சந்தானம் படமா? என்கிற கேள்வியையும் ப்ளூ சட்டை மாறன் எழுப்பும் அளவுக்கு சந்தானத்தின் வின்டேஜ் காமெடியால் தியேட்டரே வயிறு குலுங்க சிரித்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மத கஜ ராஜா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன், 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே நல்லா இருக்கு. ஆனால், சமீப காலமாக படங்கள் என்கிற பெயர்களில் பல குப்பை படங்களை எடுத்து வருகிறார்களே. 60 சீனில் அனைத்தும் நல்லா இருக்கணும்னா ஆசைப்படுகிறோம். நறுக்கென ஒரு 4 சீன் நல்லா இருந்தா போதாதா? அந்த நறுக்குன்னு 4 சீன் இந்த படத்தில் தாராளமாகவே இருக்கு என ப்ளூ சட்டை மாறன் மத கஜ ராஜா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ஓவர் கிளாமர்: வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என 2 ஹீரோயின்களையும் எந்தளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு கிளாமராக சுந்தர். சி இந்த படத்தில் காட்டியுள்ளார் என்றும் குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நீங்க தான் முடிவு செய்ய வேண்டும். ஓடிடியில் பல ஏ சான்றிதழ் படங்களே நடு வீட்டில் ஓடி வரும் நிலையில், இந்த படத்தை தாராளமாக தியேட்டரிலேயே பார்க்கலாம் என்றும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

சந்தானம் காமெடியனாகவே இருந்திருக்கலாம்: சந்தானத்தின் டைமிங் பஞ்ச் காமெடி எல்லாம் ரசிகர்கள் இப்ப ரொம்பவே மிஸ் செய்யுறாங்க. இந்த படம் விஷால் படமா? சந்தானம் படமா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு காமெடி டாப் கிளாசாக இருப்பது தான் இந்த படத்தை நல்லா இருக்கு என்று சொல்ல காரணமே எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X