Madha Gaja Raja Box Office: முதல் நாளை விட அதிகம்.. 2 நாட்களில் விஷாலின் மத கஜ ராஜா வசூல் எவ்வளவு?

சென்னை: தமிழ்நாட்டில் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் கூட பெரிதாக இந்த பொங்கலுக்கு வசூல் வேட்டை நடத்தாத நிலையில், சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் மற்றும் ஆர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் முதல் நாளை விட 2வது நாளில் கூடுதல் வசூலை அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

12 ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படிகூட இந்த காலத்தில் காமெடியான கமர்ஷியல் படங்களை இயக்குநர்கள் உருவாக்குவதில்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல பிரபல விமர்சகர்களும் இந்த படம் தான் பொங்கல் வின்னர் என்றே கூறி வருகின்றனர்.

vishal madha gaja raja madhagajaraja box office

பொங்கல் பண்டிகையான இன்று ஜெயம் ரவி மன்னிக்கவும் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை மற்றும் முரளியின் 2வது மகன் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக என்ன மேஜிக் நடத்தப் போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.

மத கஜ ராஜா 2வது நாள் வசூல்: மத கஜ ராஜா படத்தின் சுருக்கமே MGR என வைக்கப்பட்டு இருந்த நிலையில், எம்ஜிஆர் என்னைக்குத்தான் தோற்று இருக்கிறார் என்பது போல எம்ஜிஆர் பெயர் கொண்ட மத கஜ ராஜா கும்பமேளா போல 12 வருஷம் கழித்து வந்தாலும் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டும் சுந்தர். சியின் அரண்மனை 4 வெற்றியடைந்த நிலையில், 2வது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் வேட்டையை இந்த படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஷால் ரொம்ப ஹேப்பி: உடல்நலக்குறைவு இருந்தாலும் படத்தை புரமோட் செய்ய விஷால் கை நடுக்கத்துடன் வந்து பேசிய நிலையில், இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என மக்கள் தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர். ஆனால், தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சிம்பதியுடன் மட்டும் செல்லாமல் சிரித்துக் கொண்டு முதல் நாள் சென்றதன் விளைவு தான் முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்த மத கஜ ராஜா 2வது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் வரை கூடியிருக்கிறது. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.7 கோடி ரூபாய் வசூலை இந்த படம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

vishal madha gaja raja madhagajaraja box office

பெரிய வசூல்: ஞாயிற்றுக்கிழமை வெளியான மத கஜ ராஜா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 3 முதல் 4 கோடி ரூபாயை தினமும் அள்ளினால் 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வசூலை பொங்கல் விடுமுறையில் அள்ளிவிடும் என்றும் அதற்கு மேல் வசூல் வரவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். சுந்தர். சி மற்றும் விஷாலுக்கு இது பெரிய ஜாக்பாட் தான் என்றும் இந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் படமும் சீக்கிரம் வந்தால் அடுத்த வெற்றி உறுதி என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X