விஷால் காட்டுல மழைதான்.. இந்த வாரமும் பெரிய போட்டி இல்லை.. 100 கோடி வசூல் அடிக்குமா மத கஜ ராஜா?
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சதா, நிதின் சத்யா, சோனு சூட், ஆர்யா, மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான மத கஜ ராஜா நான் ஸ்டாப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
விஷால் நடித்து கடைசியாக வெளியான ரத்னம் படம் வெற்றி பெறவில்லை. அதற்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில், மத கஜ ராஜா திரைப்படம் இந்த வாரமும் வசூல் வேட்டை நடத்தும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பொங்கல் வின்னர்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை எந்தவொரு பெரிய படமும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தான் பெரிய படமாக வெளியாக காத்திருக்கிறது. பொங்கலுக்கு வெளியான வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட புதிய படங்களுக்கு போட்டியாக வெளியான விஷாலின் மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியான நிலையில், பொங்கல் வின்னராக மாறியுள்ளது.
இந்த வார ரிலீஸ் படங்கள்: இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரம் பாட்டல் ராதா, குடும்பஸ்தன், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், குழந்தைகள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் நாளை வெளியாகின்றன. இந்நிலையில், இந்த வாரமும் மத கஜ ராஜா காட்டில் மழை தான் என்கின்றனர்.
50 கோடி வசூல்: இதுவரை விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் அசால்ட்டாக 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மீண்டும் வசூல் வேட்டையை விஷாலின் மத கஜ ராஜா படமே நடத்தும் என்கின்றனர். பாட்டல் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்கள் எந்தளவுக்கு ரசிகர்களை கவரும் என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர்.
100 கோடி வருமா?: விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகும் வரை மத கஜ ராஜா திரைப்படம் அடுத்த 2 வாரங்களும் தொடர்ந்து ஓடினால் நிச்சயம் 100 கோடி வசூல் வேட்டையை நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் மற்ற மொழிகளிலும் அந்த படத்தை டப் செய்து ரிலீஸ் செய்யும் முயற்சிகளும் ஓடிடி உரிமம் உள்ளிட்ட விஷயங்களும் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். சுந்தர். சியின் அடுத்த படத்திற்கும் மத கஜ ராஜா படத்தின் வெற்றி மிகப்பெரியளவில் கைகொடுக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











