கிடப்பில் போடப்பட்ட மத கஜ ராஜா…ஒடிடியில் ரிலீஸ் !

சென்னை : பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட மத கஜ ராஜா ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளன.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மத கஜ ராஜா.

இப்படத்தில் வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

8 ஆண்டுகள் கிடப்பில்

8 ஆண்டுகள் கிடப்பில்

2013ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாரான இப்படம் பலமுறை வெளியாகும் என அறிவித்தும் இன்று வரை வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுளுக்கு மேல் ஆகியும் இப்படம் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. பணப்பிரச்சினை காரணமாக இப்படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகாத நிலையில், நடிகர் விஷால் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஹிப்பாப் ஆதி இசை அமைத்து இருந்தார். இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், கிரண், பிரபு, சந்தனம், சதீஷ், வைபம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நகைச்சுவை படமாக அமைந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

எனிமி

எனிமி

கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்ஷன்,அயோக்யா, சக்ரா போன்ற படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின. தற்போது விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தை நடித்து இயக்கி வருகிறார். மேலும், எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் விஷால் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்திலும் நடிக்க உள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மத கஜ ராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X