மதகஜராஜா வெளியாகும்... வெற்றி பெறும்! - விஷால்

By Shankar

சென்னை: நான் நடித்த மதகஜராவும் வெளிவரும், வெற்றி பெறும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

அவர் தயாரித்து, நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இப்போது, தடைபட்டு நிற்கும் தனது மதகஜராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

வேலூரில்

வேலூரில்

பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திப்பதற்காக வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் பார்வையாளர்கள் நிறைந்தக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கூடுதலாக 72 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. எனது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக இதை கருதுகிறேன்.

நன்றி

நன்றி

இந்தப் படம் முழுமையான வெற்றி அடைந்துள்ளதற்காக ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், திரைப்பட இயக்குநர் சுசீந்திரனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து அரங்குகளுக்கும்

அனைத்து அரங்குகளுக்கும்

பாண்டிய நாடு திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் அனைத்துக்கும் சென்று வர ஆசைப்படுகிறேன். கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்குச் சென்றுள்ளேன். இப்போது வேலூர் மாவட்ட திரையரங்குகளுக்கு வந்துள்ளேன். இதையடுத்து, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளேன்.

ஏப்ரலில்

ஏப்ரலில் "நான் சிவப்பு மனிதன்'

எனது அடுத்தப் படம் "நான் சிகப்பு மனிதன்'. இத் திரைப்படத்தை வரும் ஆண்டு ஏப்ரல் 11-ல் திரையிட திட்டமிட்டுள்ளோம்.

மதகஜராஜா

மதகஜராஜா

மதகஜராஜா திரைப்படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திரையிடுவதற்கு முயற்சித்து வருகிறோம். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெறும்என்றார் விஷால்.

மீண்டும் விஷாலுடன்

மீண்டும் விஷாலுடன்

இதையடுத்து, இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், விஷால் நடிக்கும் மற்றொரு படத்தைத் தயாரிக்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X